சட்ட அங்கீகாரம் இல்லாத உயரதிகாரிகள் குழுவின் (சி.எஸ்.ஓ.,) முடிவு அடிப்படையில், அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., சலுகை அளிப்பதாக, நகரமைப்பு வல்லுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சென்னை பெருநகர் பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், 2012ம் ஆண்டில், 88 அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதில் பெரும்பாலான திட்டங்கள், குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் திட்டங்களாக உள்ளன.
சலுகை சரியா?:தற்போது நடைமுறையில் உள்ள வளர்ச்சி விதிகளின்படி, நான்கு மாடிகள் அல்லது 15 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள கட்டடங்கள் அனைத்தும் அடுக்குமாடி கட்டடங்களாக வரையறுக்கப் பட்டுள்ளன.இத்தகைய கட்டடங்கள் கட்ட, ஏராளமான விதிமுறைகள் உள்ளன. இவற்றில், புதிய கட்டடத்திற்கும், அதன் அருகில் உள்ள கட்டடங்களுக்கும் தேவையான இடைவெளி குறித்த விதியால், தற்@பாது, புதிய சர்ச்சை எழுந்து உள்ளது.அடுக்குமாடி கட்டடங்கள் அல்லாத சாதாரண கட்டடங்களுக்கு, மனை அமைந்துள்ள இடத்தின் சூழலை பொறுத்து, இந்த விதி தளர்த்தப்படுவது வழக்கம்.
ஆனால், அண்மை காலமாக, அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, உயரதிகாரிகள் குழுவின் பரிந்துரை என்ற பெயரில், இத்தகைய தளர்வு சலுகை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும், குறிப்பிட்ட சில அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு போக்குவரத்துபோலீசாரின் தடையின்மை சான்றிதழ் கிடைக்காத நிலையிலும், நிபந்தனை அடிப்படையிலான திட்ட அனுமதிகள் வழங்கப் பட்டுள்ளன.
கண்காணிப்பு குழு:சி.எம்.டி.ஏ.,வின் இத்தகைய செயல்பாடுகள், அதை கண்காணிக்க ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
"அங்கீகாரம் இல்லை':இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கண்காணிப்பு குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:விதிமீறல் கட்டடங்கள் விவகாரத்தில் பெரிய பிரச்னையாக இருப்பது, அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள அதிகபட்ச விதிமீறல்கள் தான். இத்தகைய நிலையில், சாதாரண கட்டடங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தளர்வு சலுகைகளை, அடுக்குமாடி கட்டடங்களுக்கு பயன்படுத்துவதால், விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வழிவகுப்பதாக உள்ளது.
குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு திட்ட அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்படும் சமயங்களில், என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, உயரதிகாரிகள் குழுவின் (சி.எஸ்.ஓ.,) கூட்டம் மூலம் அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகளின்
அடிப்படையில் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
சி.எஸ்.ஓ.,வுக்கு சட்ட அடிப்படையில், எவ்வித அங்கீகாரமும் இல்லை என்பதால், இந்த முடிவுகளின் அடிப்படையில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.