கவர்னர் உரையில், வறட்சி நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதல்வரின் இன்றைய பதிலுரையில், தங்களுக்கு விடிவு பிறக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.குறுவை சாகுபடி நடக்காத நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த, அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடியும், தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு தரப்பில், விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு, 8,692 ரூபாய், பேரிடர் நிவாரணம், 5,000 ரூபாய் சேர்த்து மொத்தம், 13,692 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், மறுபுறம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை முன்வைத்து, டெல்டா மாவட்டங்களில், தொடர் போராட்டங்களும் அரங்கேறியது. விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவதற்காக, முதல்வர் உத்தரவை அடுத்து, அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு, டெல்டா மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தது. எனவே, கவர்னர் உரையில், வறட்சி நிவாரணம் குறித்த அறிவிப்பு வரும் என, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அமைச்சர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், நிவாரணம் வழங்கப்படும் என, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "டெல்டா மாவட்ட விவசாயிகள், வறட்சி காரணமாக, தற்கொலை செய்துக்கொள்ளவில்லை' என, அமைச்சர் பன்னீர்செல்வம் சபையில் தெரிவித்துள்ளார். எனவே, இறந்த விவசாயிகளுக்கு, அரசு தரப்பில், நிவாரணம் ஏதும் வழங்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது. மாறாக, விவசாயிகளுடன், விவசாய தொழிலாளர் களுக்கும் நிவாரணம் வழங்க வாய்ப்புள்ளது. சட்டசபையில், இன்று முதல்வரின் பதிலுரையில் தங்களுக்கான நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.