arasial news | ஈஸ்வரனுக்கு இனி, இடமில்லை பெஸ்ட் ராமசாமி பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈஸ்வரனுக்கு இனி, இடமில்லை பெஸ்ட் ராமசாமி பேட்டி

Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருப்பூர் :""கொ.மு.க., என் தலைமையில் இயங்குவதை நீதிமன்ற உத்தரவுகள் உறுதிபடுத்தியுள்ளன. கட்சிக்கு யார் வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வேன்; ஈஸ்வரனுக்கு இனி, இடமில்லை,'' என, கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி நேற்று தெரிவித்தார். திருப்பூரில் அவர் அளித்த பேட்டி: கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், "கொங்குநாடு முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், நிறுவன தலைவராக நானும், பொதுச்செயலராக கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடனும் கட்சி துவங்கப்பட்டது. டில்லி சென்று தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்யப்பட்டது. 2007ல், கொங்கு வேளாள கவுண்டர் பேரவையில் இருந்து, ஈஸ்வரன் இணைந்தார். கருமத்தம்பட்டியில் மாநாடு நடத்தப்பட்டு, "கொங்குநாடு முன்னேற்ற பேரவை' என, பெயர் மாற்ற திட்டமிடப்பட்டது. மூன்று மாதத்தில் பொதுத்தேர்தல் வந்ததால், கட்சிப் பெயரை மாற்றம் செய்ய முடியாமல், ஏழு தொகுதிகளில், கொ.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரிகளுக்கு, கட்சியின் தலைவர் என்ற முறையில் நானும், பொதுச்செயலர் என்ற முறையில் கோவிந்தசாமியும், வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கும் கடிதம் கொடுத்தோம். இடைப்பட்ட நாளில், கொ.மு.க., பொதுச்செயலராக ஈஸ்வரனை, தலைவர் என்ற முறையில் நான் நியமித்தேன். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், 2012 ஆக., 5ல், பொதுக்குழு கூட்டப்பட்டு, ஈஸ்வரன் நீக்கப்பட்டார். ஆக., 12ல், அவர் ஒரு பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தார். அதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற நிலையில், ஈஸ்வரன் மாவட்ட எஸ்.பி.,யிடம், "பொதுக்குழு கூட்டம் நடத்த மாட்டேன்; வெளியூர்களிலிருந்து வந்தவர்களுக்கு, சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை சாப்பிட்டு விட்டு செல்ல
அனுமதிக்க வேண்டும்' என கெஞ்சி, அனுமதி வாங்கி, அரை மணி நேரத்தில் பொதுக்குழு நடத்தி முடித்ததாக தெரிவித்தார். கொ.மு.க., கட்சியின் சட்ட விதிகள், நிறுவன தலைவர் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கே அதிகாரம் உள்ளதாக வடிவமைக்கப்பட்டு, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக அமைப்பு ரீதியாக எந்த மாற்றமும் செய்யவில்லை; நான், நியமித்தேன்; நானே நீக்கிவிட்டேன், அவ்வளவுதான். கடந்த செப்., மாதம், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில், "பெஸ்ட் ராமசாமிக்கும், கொ.மு.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை; கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என, ஈஸ்வரன் வழக்குத்தொடர்ந்தார். நான்கு மாதமாக விசாரணை நடத்திய நீதிபதி, நேற்று முன்தினம், தீர்ப்பு வழங்கினார். அதில், வழக்கு தொடர்ந்த ஈஸ்வரனுக்கும், கொ.மு.க.,வில் எந்த உரிமையும் இல்லை என கூறி, மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த, 2ம் தேதி, நான் தொடர்ந்த வழக்கு அடிப்படையில், திருப்பூர் மாவட்ட நீதிமன்றம், "கொ.மு.க., பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஈஸ்வரன் பயன்படுத்தக் கூடாது' என, இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகள், கொ.மு.க., என் தலைமையில் இயங்குவதை உறுதி செய்துள்ளது. இனி, கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளோம். ஈஸ்வரன் கோஷ்டிக்கு சென்ற யார் வந்தாலும், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம்; கொ.மு.க.,வில் ஈஸ்வரனுக்கு இனி இடமில்லை. இவ்வாறு, பெஸ்ட் ராமசாமி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை