சென்னை
: "சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மூன்று காலரிகளுக்கு,
மாநகராட்சி, "சீல்' வைத்தது செல்லாது' என, சென்னை ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற, புதிதாக
விண்ணப்பிக்கும் படியும், உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கத்தில், எம்.ஏ.
சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு, பார்வையாளர்கள் அமர்ந்து
கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கு, "ஐ', "ஜே', "கே' என, புதிதாக, மூன்று
காலரிகள் கட்டப்பட்டன. இந்த காலரிகளைப் பயன்படுத்த, சென்னை மாநகராட்சி
அனுமதிக்கவில்லை. முறையான அனுமதி பெறவில்லை எனக் கோரி, அவற்றை இடிக்க
வேண்டும் என, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. மேலும், மூன்று காலரிகளையும்
மூடி, "சீல்' வைக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து,
"டி-20' கிரிக்கெட் போட்டிக்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்து, மூன்று காலரிகளையும் பயன்படுத்த, அனுமதி பெற்றது. கடந்த
ஆண்டு, டிசம்பரில், இந்தியா - பாகிஸ்தான், ஒரு நாள் கிரிக்கெட்
போட்டிக்காக, ஐகோர்ட்டை அணுகியது. அப்போதும், மூன்று காலரிகளையும்
பயன்படுத்திக் கொள்ள, ஐகோர்ட், இடைக்கால அனுமதி வழங்கியது. இந்நிலையில்,
சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும நடவடிக்கைகளை
எதிர்த்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்திருந்த மனுவை,
நீதிபதிகள் தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்'
விசாரித்தது. "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: ஐகோர்ட்டின், இடைக்கால
உத்தரவுகளைத் தொடர்ந்து, மூன்று காலரிகளையும், இரண்டு சந்தர்ப்பங்களில்
பயன்படுத்தியுள்ளனர். அப்போது, எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதன்
மூலம், எதிர் தரப்பில் தெரிவிக்கப்படும் யூகங்கள் சரியல்ல என,
நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலரிகளுக்கு, "சீல்' வைத்த,
மாநகராட்சியின் உத்தரவை, சட்டப்படி ஏற்கமுடியாது. மாசு கட்டுப்பாட்டு
வாரியத்தின் அனுமதியை கோரி, ஒரு வாரத்திற்குள், மனுதாரர் விண்ணப்பிக்க
வேண்டும். அதை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆறு வாரங்களுக்குள்,
சட்டப்படி பைசல் செய்ய வேண்டும்.இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு
உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.