அன்னூர் : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34; பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும் ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது. எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ், மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி, மனைவியை அழைத்து வந்தார். நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும், முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு, முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்: கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர் திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில் இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல் வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான் குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார்.இவ்வாறு, முருகேஸ்வரி வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.