சிவகங்கை : சிவகங்கை அருகே பிளஸ் 1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்திற்கு, சமூக நலத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். சிவகங்கை அருகே இடையமேலூரில், 16 வயது பிளஸ் 1 மாணவிக்கும், பிரவலூரை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர். நேற்று காலை இடையமேலூரில் மணமகள் வீட்டில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ராஜராஜேஸ்வரிக்கு முன்னதாகவே புகார் வந்தது. அவர் தலைமையில், வி.ஏ.ஓ., சுந்தரவள்ளி மற்றும் மகளிர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, மாணவி வீட்டிற்கு சென்றனர். அவரின் கல்வி மற்றும் பிறப்பு சான்றுகளை, கேட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என, கண்டறிந்தனர். திருமணத்திற்கு தடை விதித்தனர். தடையை மீறி நடத்தினால், இரு தரப்பு பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர். திருமணமும் நிறுத்தப்பட்டது. சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவியின் தந்தை, வெளிநாட்டில் வசிக்கிறார். அவரது தாய், விவரம் தெரியாமல், திருமணத்திற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக, பள்ளியில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார் மாணவி. திருமணத்திற்கு பின் மீண்டும் பள்ளி செல்ல அம்மாணவி முடிவு செய்துள்ளார். ஆனால், உரிய விசாரணைக்கு பின், திருமணம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.