Advertisement
மாணவியின் துப்பட்டாவை இழுத்து, "ஈவ்-டீசிங்':நடிகர் சிறையில் அடைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,03:23 IST

கோவை : கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து, கீழே தள்ளி, துப்பட்டாவை இழுத்து, "ஈவ்-டீசிங்' செய்ததாக, தமிழ் திரைப்பட நடிகரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்; பின் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் மகன், அஜய் பிரதீப், 27. இவர், சிவானந்தா காலனியை சேர்ந்த தன் நண்பர் ஈஸ்வரன், 34, என்பவருடன், நேற்று முன்தினம், மாலையில் பாரதி பார்க் ரோட்டில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, அவினாசிலிங்கம் பல்கலையில் படிக்கும், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாணவி, அவரது தோழியை, இருவரும் பின் தொடர்ந்து சென்று, கிண்டல் செய்துள்ளனர்; இதற்கு மாணவியர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனாலும், தொடர்ந்து மாணவியரை கேலி செய்ததுடன், தங்களது பைக்கை, மாணவியரின் வாகனம் மீது மோதச் செய்தனர். நிலைதடுமாறிய மாணவியர் இருவரும், கீழே விழுந்தனர். மாணவியின் துப்பட்டாவை பிடித்து அஜய் பிரதீப் இழுத்துள்ளார்; மாணவியர் இருவரும் கதறி அழுதும், விடவில்லை. மாணவியரின் கதறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் நடிகரும், அவர் நண்பரும் பைக்கில் தப்பித்தனர்.சாய்பாபா கோவில் போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் புகார் அளித்தனர். இதையடுத்து, அஜய் பிரதீப் மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை, "ஈவ்-டீசிங்' பிரிவில் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட அஜய் பிரதீப், "18 வயது புயலே, மேகத்து மழை, மின்சாரம்' ஆகிய தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.