உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி அலுவலகக் கட்டடத்தை சுற்றிலும் குப்பையை கொட்டி தீ வைப்பதால், திறக்கப்படாமலேயே "மூடுவிழா' காணவுள்ளது. மக்களின் வரிப்பணம் ரூ.70 லட்சம் வீணாகி வரு
கிறது.உசிலம்பட்டி - எழுமலை ரோட்டில், நகராட்சி அலுவலகம் உள்ளது. இடநெருக்கடியால், நகருக்கு வெளியில் புது கட்டடம் கட்ட 2007ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் அறை, கமிஷனர் அறை,
மன்றக்கூட்ட அரங்கம், பார்வையாளர்கள் ஓய்வறை, என சகல வசதிகளுடன் ரூ.70 லட்சத்தில் கட்டடம் பிரமாண்டமாக கட்டப்பட்டது. 2010ல் டிச.,7ல் திறக்க ஏற்பாடு நடந்தது."மூடுவிழா': புதிய நகராட்சி
கட்டடத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றமும், குப்பைக்கு தீ வைப்பதால் எழுதும் கரும்புகையால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், புதிய கட்டடத்திற்கு செல்ல
கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தயங்கினர். இதனால், கட்டடம் திறக்கப்படாமலேயே மூடுவிழா காணும் நிலையில் உள்ளது. கட்டடத்தை விட குப்பை மேட்டின் உயரம் அதிகமாக இருப்பதால்
அவற்றை
அப்புறப்படுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.மக்கள் சிரமம்: புது கட்டடம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குப்பைக்கு தீ வைப்பதால் 24 மணி நேரமும் புகைந்து
கொண்டுள்ளது. இதிலிருந்து கிளம்பும் புகை, பஸ் ஸ்டாண்ட் வரை பரவி வருகிறது. குடியிருப்போர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். குப்பை புகைக்கு பயந்து பலர் வீட்டை காலி செய்து விட்டனர். மதுரை
வெள்ளக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பையை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்கள் வரிப்பணம் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வரு
கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.