மதுரை : மதுரையில், தி.மு.க., செயற்குழு உறுப்பினர், "பொட்டு' சுரேஷ் கொலைக்கு பயன்படுத்திய, 2 அடி நீள பட்டாக் கத்தியை போலீசார் கண்டெடுத்தனர். ஜன., 31ல், பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் தேடுவதை அறிந்து, ஏழு பேர், நத்தம் கோர்ட்டில் சரணடைந்தனர். கோர்ட் அனுமதி பெற்று, அவர்களிடம் தனித்தனியே போலீசார் விசாரித்து வருகின்றனர். சபாரத்தினம் என்பவர் தலைமையில் தான், இக்கொலை நடந்திருக்க வேண்டும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொடுத்த தகவலின் படி, நேற்று முன் தினம், அவர் வீட்டருகே, 2 அடி நீள பட்டாக் கத்தியை போலீசார் கண்டெடுத்தனர். ரத்தம் உறைந்த அக்கத்தியில், தலைமுடி ஆங்காங்கே ஒட்டியிருந்தது. பொட்டு சுரேஷின் தலைமுடியாக இருக்கலாம் எனக் கருதி, சபாரத்தினத்திடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, சரணடைந்த ஏழு பேர், சுரேஷ் கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்படும், "அட்டாக்' பாண்டிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். இதனால், பாண்டியின் இருப்பிடம் மற்றும் அவருடனான தொடர்பு குறித்து விசாரணை நடக்கிறது. போலீசார் கூறியதாவது: "அட்டாக்' பாண்டியிடம், லோடுமேன்களாக பணிபுரிந்ததாகவும், அவ்வப்போது தங்களுக்கு உதவி செய்து வந்ததாகவும், சரணடைந்தவர்கள் கூறுகின்றனர். இதில், பாண்டியின் உறவினரான சபாரத்தினம் மீது, 2009ல், மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியில், 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்தது உட்பட, சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, கைப்பற்றப்பட்டுள்ள பட்டாக்கத்தி, சுரேஷ் கொலையின் முக்கிய ஆதாரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.