ஈரோடு : "சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய, தி.மு.க., "மாஜி' அமைச்சர் ராஜா, இம்மாதம் 22ல் ஆஜராக வேண்டும்' என, கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க., முன்னாள் அமைச்சரும், விவசாயிகள் அணி மாநிலச் செயலருமான பெரியசாமி மற்றும் அவரது மகன் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட, தி.மு.க., செயலருமான ராஜா ஆகியோர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் சென்றது. போலீஸ் சோதனை ஈரோடு, சென்னை, கரூரில் உள்ள பெரியசாமி, ராஜாவின் வீடுகள், கல்லூரி மற்றும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என, பத்து இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 2012 பிப்., 1ம் தேதி சோதனை நடத்தினர். ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., முருகேசன் விசாரிக்கிறார். பத்து இடத்திலும் சிக்கிய, ஆவணங்களின் அடிப்படையில், ராஜா அமைச்சராகும் முன்னும், பின்னும் சேர்த்துள்ள சொத்து விவரங்கள், இரு மனைவியரின் பண பலம் மற்றும் சொத்து விவரம், பத்திரப்பதிவு விவரங்கள், நகைகள், வங்கிக் கணக்கு, வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தவிர, ராஜாவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி கட்டடங்கள், பொதுப்பணித் துறையினர் மூலம் மதிப்பிடப்பட்டது. அதன்படி ராஜாவுக்கு, 3.35 கோடி மதிப்பீட்டில் சொத்துக்கள் உள்ளதாக போலீசார் பட்டியலிட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை இதுதொடர்பாக ராஜா, அவரது மனைவிகள் பரிமளம், உமா மகேஸ்வரி மற்றும் பவானியை சேர்ந்த இருவர், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட, ஆறு பேர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கடந்த அக்., 19ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இதுதொடர் பாக ஆறு பேருக்கும் நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டது. அதை அடுத்து, ராஜா உட்பட ஆறு பேரும், இதுவரையில் இரு வாய்தாக்களுக்கு கோவை நீதிமன்றத்தில் ஆஜராகினர். உத்தரவு மீண்டும் இவ்வழக்கு, இம்மாதம், 22ல் விசாரணைக்கு வருகிறது. ராஜா உட்பட ஆறு பேரும் அந்த தேதியில் ஆஜராக, நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கு சம் பந்தமாக, ராஜா மற்றும் அவரை சேர்ந்த ஆறு பேர் குறித்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை நகல்கள், கோவை நீதிமன்றத்தில் தயாராகிறது. அனைத்து நகல்களும் தயாரானதும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜராவது இது நான்காவது முறை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.