kidney affects near ViruNagar | "கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்

Added : பிப் 08, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, டி.வேப்பங்குளம் ஊராட்சி உட்பட்ட, ஏ.தொட்டியங்குளத்தில், "கிட்னி' பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பலர் இறந்துள்ளனர். மூன்று வயது குழந்தைக்குக் கூட, இந்த பாதிப்பு உள்ளதால், சோகத்தில் மூழ்கிய இக்கிராமத்தினர், ஊரை காலி செய்ய முடிவுக்கு வந்துள்ளனர். காரியாபட்டி ஏ.தொட்டியங்குளத்தில், 300க்கு மேற்பட்ட குடும்பங்கள், விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களின், நிம்மதியான வாழ்க்கைக்கு இடையே, "கிட்னி' பாதிப்பு என்ற பெயரில், விதி விளையாட துவங்கியது. இதன் பாதிப்பால், இக்கிராமத்தை சேர்ந்த, பலர் இறந்துள்ளனர். 2005க்கு பின் ஏற்பட்ட, இந்த பாதிப்பை அறியாத கிராமத்தினர், முதலில் உடல் நிலை பாதிப்பதால், இறப்பு ஏற்படுவதாக கருதினர்.

ஆனால், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பலர், அடுத்தடுத்து, இளம் வயதிலே இறந்ததால், பீதியடைந்த கிராமத்தினர், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். பலருக்கு உப்புச் சத்து, கல்லடைப்பு இருப்பது தெரிந்தது. மூன்று வயது குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில், உப்புச் சத்து, கல்லடைப்பு, கை, கால் சோர்வு என, பல வித பிரச்னைகள் காணப்பட்டன. இதை தொடர்ந்து, சில நாட்களிலே "கிட்னி' பாதித்து, இறப்பதும் தொடர்ந்தது.


கடந்த எட்டு ஆண்டுகளில், இக்கிராமத்தில் மட்டும், கிட்னி பாதிப்பால், 25 பேர் இறந்துள்ளனர். குடிநீரினால், இப்பிரச்னை ஏற்படுவதாக கருதி, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னை அருகில் உள்ள கிராமத்தினருக்கு பரவியதையடுத்து, சுற்று கிராமத்தினரும் சோகத்தில் உள்ளனர். இனி இங்கு வசித்தால், உயிர் வாழ முடியாது என கருதிய மக்கள், ஊரை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.


அக்கிராம மாணவி சுகுணா: ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். <உடல் சோர்ந்து, கை, கால் வீக்கமாக இருந்தது. இடுப்பு பகுதியில் வலி இருந்தது. மருத்துவ பரிசோதனையில் "கிட்னி' பாதிக்கப்பட்டது, தெரிந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். குடிநீரில், சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால், கிட்னி பாதித்திருப்பதாக டாக்டர்கள் கூறினர். எனக்கு ஏற்பட்ட இப்பிரச்னை மற்றவர்களுக்கு வரக்கூடாது, அதற்குள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணிகண்டன் : குடிநீரை குடத்தில் பிடித்து வைக்கும் போது, சுண்ணாம்பு போல் கறை படிகிறது. சாப்பாட்டில், தண்ணீரை ஊற்றி காலையில் பார்த்தால், மஞ்சள் நிறத்தில் நுரைகள் காணப்படுகிறது. பல்வேறு மருத்துவ மனைகளிலிருந்து, வெளியேறும் கழிவுகளை கிராமத்தின் அருகில் எரிப்பதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. காற்று பலமாக வீசும்போது, ஊருக்குள் இருக்க முடியாது. சுவாச கோளாறும் ஏற்படுகிறது.


சுப்பு: பெண்கள் எல்லோருக்கும், இந்த பிரச்னை உள்ளது. வெளியில் சொல்ல அச்சப்பட்டு, சொல்ல முடியாமல் தவிக்கிறோம். காய்ச்சல் என்றால் கூட, கிட்னி பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பீதி ஏற்படுகிறது. தற்போது, இந்த நீரை குடிக்க பயந்து, மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்துகிறோம். எத்தனை நாளைக்கு, இப்படி பணம் செலவு செய்ய முடியும். இளம் வயதிலே பலர் வாழ்க்கையை இழந்து, சிறு குழந்தைகளுடன் விதவையாக தவிக்கின்றனர்.

எங்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், ஒட்டு மொத்தமாக, ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளோம்.ஊராட்சித் தலைவி சின்னப்பிள்ளை: பலர் சிறு வயதில் இறந்துள்ளனர். மருத்துவ கழிவுகளை எரிப்பதாலும், குடிநீரினாலும் இப்பிரச்னை ஏற்படுகிறது என, மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால், ஊரை காலி செய்ய முடிவு எடுத்துள்ளனர். இனி அதிகாரிகள் தான் தீர்வு காண வேண்டும். சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்ட போது, ""கிராமத்திற்கு சென்று, தண்ணீரை சோதனை செய்து பார்த்தால் தான், உண்மை நிலவரம் தெரியும்'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - erode,இந்தியா
09-பிப்-201307:46:10 IST Report Abuse
Siva Kumar ஊருக்கே பொதுவான r o பிளான்ட் போட வேண்டும்
Rate this:
Share this comment
anu - chennai,இந்தியா
10-பிப்-201305:21:41 IST Report Abuse
anu ஆர் ஓ கந்தகத்தை முழுமையாக எடுக்காது. கந்தகத்தை எடுக்க எளிமையான வழி நீரினுள் குறைவான அழுத்தத்தில் காற்றை செலுத்தினால் நியுற்றளைஸ் ஆகும்....
Rate this:
Share this comment
Cancel
arunmohan - chennai,இந்தியா
09-பிப்-201301:21:19 IST Report Abuse
arunmohan எனக்கு தெரிந்து அந்த கிராம மக்களே சாம்பிள் தண்ணீர் எடுத்து கொண்டு சென்னை தண்ணீர் கார்போர்ரசியன் சென்று டெஸ்ட் செய்து ரிப்போர்ட் பார்க்கலாம். எனக்கு தெர்ருந்தா வகையில் இதற்க்கு குறைந்த கட்டணமே ஆகும் (அரௌண்ட் ருபாய் 300)
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
08-பிப்-201314:55:34 IST Report Abuse
Guru மிக மிக்கியமான பிரச்சனை, சுகாதாரதுரையும், முதல்வரும் கவனிப்பார்களா?, ...
Rate this:
Share this comment
Cancel
Ramu Gopalakrishnan - Chennai,இந்தியா
08-பிப்-201314:32:57 IST Report Abuse
Ramu Gopalakrishnan இந்த குடி நீர் பிரச்சனைக்கு எதாவது தொண்டு நிறுவனம் முன் வந்தால் என்னால் முடிந்ததை செய்வேன்
Rate this:
Share this comment
Cancel
Ramu Gopalakrishnan - Chennai,இந்தியா
08-பிப்-201314:29:14 IST Report Abuse
Ramu Gopalakrishnan இந்த குடிநீர் பிரச்சினையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தீர்த்து வைக்க வேண்டியது அந்த பகுதி அண்ண்ணா தி மு கவினர் கடமை.
Rate this:
Share this comment
Cancel
pusparaj - tirupur,இந்தியா
08-பிப்-201312:00:37 IST Report Abuse
pusparaj . சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்ட போது, ""கிராமத்திற்கு சென்று, தண்ணீரை சோதனை செய்து பார்த்தால் தான், உண்மை நிலவரம் தெரியும்'' என்றார்.... நாய்களா அதை எப்போடா செய்வீங்க....இவனுங்களுக்கு எதுக்கு நம் வரி பணத்திலிருந்து சம்பளம் கொடுக்கணும்.... வரும் முன் காப்பது தான் அரசின் கடமை.. ஊரே செத்துட்டு இருக்கு.. இணுங்க இனி மேதான் டெஸ்ட் பன்னுவானுன்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
08-பிப்-201311:47:00 IST Report Abuse
BLACK CAT குடிநீரினால் வரும் நோய் தான் ...... தண்ணீரை துணியால் வடிகட்டி பயன் படுத்த வேண்டும்....
Rate this:
Share this comment
navvar - mahe,செசேல்ஸ்
10-பிப்-201300:55:57 IST Report Abuse
navvarசரியாக சொன்னப்பு...
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
08-பிப்-201310:37:23 IST Report Abuse
Sami அரசுக்கு இதை போன்ற மக்கள் பிரச்சனைகளை கண்டுக்கு நேரம் இல்லை போலும். ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தால் மட்டுமே இப்பிரச்சனை ஓரளவு தீரும். இன்றைய இளைஞர்கள் நிச்சயம் முன்வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் எது இனிமைதரும் என்று. நலம் பெற வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-பிப்-201312:37:23 IST Report Abuse
மதுரை விருமாண்டிநாலு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து மம்மி இவர்களின் தண்ணீர் பிரச்சினையை ஒரேயடியாக தீர்த்து வைக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை