பொன்னேரி:குடியிருப்புகளின் மத்தியில் கழிவுநீர், குப்பை கொட்டப்பட்டு, துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுவதால், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், திருவேங்கிடபுரம், உப்பரபாளையம், புலிக்குளம், கொக்குமேடு, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 1,500 குடியிருப்புகளில், 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.கல்வி, வியாபாரம், சுகாதாரம் என கிராமங்களில் இருந்தும், நல்ல குடிநீர், காற்றோட்டமான இருப்பிடம், பிரபல தனியார் பள்ளிகள் என, சென்னை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்தும், மேற்கண்ட ஊராட்சியில், மக்கள் குடியேறி வருகின்றனர்.
அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப, சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. மேற்கண்ட குடியிருப்புகளில் சேகரிக்கப்படும், குப்பைகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஒரத்தில் கொட்டப்படுகின்றன.அதேபோல் அரசு கல்லூரி அருகில், குடியிருப்புகளுக்கு மத்தியில் கொட்டப்படும் குப்பையால், அப்பகுதி மக்கள், சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகின்றனர்.ஊராட்சியில் தேங்கும் குப்பையை கொட்டுவதற்கு என்று, நிரந்தர இடம் இல்லாமல், நிர்வாகம் மேற்கண்ட இடங்களில் கொட்டி வருகிறது.
மேற்கண்ட இடங்களில், குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:குப்பை கொட்டுவதற்கு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடம் தேடி வருகிறோம். தற்போதைக்கு கழிவுநீர் கால்வாய் எதுவும் அமைக்கப்படவில்லை.
ஏற்கனவே அமைக்கப்பட்ட கால்வாய்கள் மூலம் கழிவுநீர், மாற்று இடத்தில் கொண்டு சேர்க்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவுநீர் கொண்டு சேர்க்க, இடம் தேர்வு செய்த பின்னர், மற்ற இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.