பவானி: பவானியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஒரிச்சேரிபுதூர். இக்கிராமத்தில் வசிப்பவர்கள் முக்கிய தொழிலாக விவசாயமும், விவசாயம் சார்ந்த கூலி தொழில் செய்து வருகின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பவானி, ஆப்பக்கூடல், சக்தி நகர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பாக, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆறு வீடுகள் கட்டப்பட்டது.
இக்குடியிருப்பில், ஆறு ஊழியர்கள் குடும்பத்துடன் சில காலமாக தங்கி இருந்தனர். அப்பகுதி முழுவதும் காடாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் பாம்புகள் பகல், இரவு என எந்நேரங்களில் சுற்றி திரிகிறது. ஊழியர்களின் வீட்டுக்குள் பல முறை பாம்பு புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.
பாம்புகள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்ததால், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றனர். அதன்பின், அங்கு யாரும் குடியிருக்கவில்லை என்பதுடன், இப்பிரச்னையை அறிந்தும், குடியிருப்பு வளாகத்தை பராமரிக்காமலும், அங்குள்ள புதர்களை அகற்றாமலும் விட்டுவிட்டனர். இதனால், அவ்விடம் பாழடைந்து காணப்படுகிறது.
ஆனால், இப்பகுதியில் இருந்து வெளியேறிய, 50க்கும் மேற்பட்ட பாம்புகளை, இவ்வளாகத்துக்கு வெளியே வசிப்பவர்கள் அடித்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
இவ்வளாகத்தை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முறையாக பராமரிக்கலாம். அல்லது அடித்து அகற்றி, சுத்தமாக வைத்திருக்கலாம். புதர் மண்டிக்கிடப்பதால், அங்கு பல பாம்புகள் வசிக்கிறது. இப்பகுதியில் மக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது, என்றனர்.
பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விசாரித்தபோது, இதுபற்றி எங்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. எங்கள் மேல் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.