மோகனூர்: நாமக்கல் - வளையயப்பட்டி செல்லும், "16 ஏ' அரசு டவுன் பஸ்ஸை, நேற்று காலை, பரளி கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வப்போது இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதை கண்டித்து நடந்த போராட்டத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பரளி கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்திற்கு, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, "16 ஏ' எனும் டவுன் பஸ் செல்கிறது. அந்த பஸ், நாமக்கல், அணியாபுரம் வழியாக பரளி மற்றும் வளையப்பட்டி வரை செல்கிறது. நாள்தோறும், காலை, 9 மணியளவில், பரளிக்கு, இந்த டவுன் பஸ் வருகிறது.
அந்த பஸ்ஸில், பரளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அணியாபுரம், நாமக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். பஸ் தாமதமாக வருவதன் காரணமாக, அதில் பயணிக்கும் பள்ளி மாணவ, மாணவியரும், தங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் சூழல் உள்ளது. ஒருசில நாட்கள், அந்த பஸ் திடீரென நிறுத்தப்படுகிறது.
அச்சமயங்களில், பரளியை சேர்ந்த மாணவ, மாணவியர், பல கி.மீ., தூரம் வரை நடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சம்மந்தப்பட்ட டவுன் பஸ்ஸை, காலையில் முன்கூட்டியே இயக்க வேண்டும். அதுபோல், பஸ்ஸை நிறுத்தம் செய்யவும் கூடாது என, பரளி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், சம்மந்தப்பட்ட, "16 ஏ' டவுன் பஸ் வழக்கம்போல் தாமதமாகவே இயக்கப்படுகிறது. இந்நிலையில், இரு நாட்களாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, "16 ஏ' டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. அதனால், பரளியை சேர்ந்த மாணவ, மாணவியர், பள்ளி, கல்லூரிக்கு செல்லவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இச்சூழலில், நேற்று காலை, 9 மணியளவில், வழக்கம்போல், "16 ஏ' டவுன் பஸ் பரளி கிராமத்திற்கு வந்தது. ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த பஸ்ஸை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த, நாமக்கல் அரசு போக்குவரத்து கிளைப் பணிமனை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "பஸ்ஸை காலை வேளையில், 9 மணிக்கு முன்னதாக இயக்க வேண்டும். தொடர்ந்து, பஸ் போக்குவரத்து இருக்க வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சிறைபிடிக்கப்பட்ட பஸ் விடுவிக்கப்படும்' என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதற்கு, போக்குவரத்து கிளைப் பணிமனை அதிகாரிகள் சம்மதித்தனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வரும்படியும், அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். அதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட விடுவிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.