கும்மிடிப்பூண்டி:படகு மூலம் தமிழகத்திற்கு கடத்துவதற்காக, ஆந்திர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3 டன் செம்மர துண்டுகளை ஆந்திர வன துறையினர் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பனங்காடு கிராமத்தில், படகு மூலம் தமிழகத்திற்கு கடத்துவதற்காக செம்மர துண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட வன துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட வன அலுவலர் பவன்குமார் உத்தரவின் பேரில், வன சரகர் நாராயணா தலைமையில், 10 பேர் கொண்ட சிறப்பு படை நியமிக்கப்பட்டு பனங்காடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரி அருகே உள்ள தைல மர தோப்பில் பதுக்கி வைக்க ப்பட்டிருந்த, 5 அடி முதல், 7 அடி நீளம் கொண்ட, 3 டன் எடை செம்மர துண்டுகளை, வன துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்.பழவேற்காடு ஏரி வழியாக படகு மூலம், தமிழகத்திற்குள் செம்மரங்கள் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டது, வன துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
வழக்கு பதிந்த சித்தூர் மாவட்ட ஆந்திர மாநில வன துறையினர், பதுக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.