Advertisement
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீர் சேமிப்பில் அலட்சியம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

தர்மபுரி: தர்மபுரி யூனியனுக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் நிரப்புவதில், ஊழியர்கள் அலட்சிய போக்கை காட்டி வருவதால், தண்ணீர் வீணாகி வருகிறது.
இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் வழக்க, 500 குடியிருப்பு பகுதிக்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாந்தோப்பு, நெல்லிநகர், பிடமனேரி பெருமாள் கோவில் தெரு, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, வெண்ணாம்பட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் போர் தண்ணீர் நிரப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பல போர்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சில பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெல்லி நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், தண்ணீர் நிரப்புவதில், பஞ்சாயத்து ஊழியர் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால், இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வீணாக தெருக்களில் ஓடும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.
நேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி, பல மணி நேரம் தண்ணீர் தொட்டியில் இருந்து தெருக்களில் ஓடியது. அப்பகுதியில் உள்ள திறந்த வெளி நிலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில், இதுபோல் தண்ணீர் விரையமாவதை தடுக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.