ஓசூர்: ஓசூர் நகரில், பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தொழில் நகரமான ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், 44 வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பிற வங்கி வாடிக்கையாளர்களும், எளிதாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வகையில், ஏ.டி.எம்., மிஷின்களை, முக்கிய சாலைகளில் வைத்துள்ளன.
இந்த ஏ.டி.எம்., மிஷின் மையங்களை திறக்கும் போது, 24 மணி நேரம் செயல்படுகிறது என அறிவிப்பு வைக்கின்றனர். அதன்பின், பராமரிப்பு இல்லாமலும், பணம் இல்லாமலும், முடங்கி போய் கிடக்கின்றன.
குறிப்பாக, பாகலூர் சாலையில், ஆந்திரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பழைய பெங்களூரு சாலை ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையங்கள், கடந்த பல வாரமாக செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளன.
இவற்றில் ஒரு சில மிஷின்களில், வங்கி நிர்வாகிகள் தரப்பில், "அவுட் ஆஃப் சர்வீஸ்' என அறிவிப்பு வைத்துள்ளனர். அதனால், வாடிக்கையாளர்கள், அந்த அறிவிப்பை பார்த்து, ஏ.டி.எம்., கார்டுகளை, மிஷின்களில் பயன்படுத்தாமல் திரும்பி சென்று விடுகின்றனர்.
சில ஏ.டி.எம்., மையங்களில், பழுதடைந்தநிலையிலும் தினசரி திறந்து வைக்கப்பட்டுள்ளன. செயல்படவில்லை என்பதற்கான அறிவிப்பும் வைக்கப்படவில்லை. ஏ.டி.எம்., வாட்ச்மேன்களும் பணியில் இருப்பதில்லை.
இதனால், பழுதடைந்தது தெரியாத வாடிக்கையாளர்கள், அந்த ஏ.டி.எம்., மிஷினில் தங்களுடைய ஏ.டி.எம்., கார்டுகளை செலுத்தி விடுகின்றனர். அப்போது கார்டுகள் உள்ளே சென்று திரும்பி வருவதில்லை. சில மிஷின்களில் பணம் வராமல், "உங்கள் வங்கி கிளையை அணுகவும்' என பில் வருகிறது.
ஆனால், வங்கி கணக்குகளில் பணம் எடுக்கப்பட்டதாக சில நொடிகளில் மொபைல்ஃபோனுக்கு எஸ்.எம்.எஸ்., தகவல் வருகிறது. சிறிது நேரம் கழித்து, வங்கி கணக்கில் பணம் சேமிப்பு கணக்கில் உள்ளதாக மறு தகவல் வருகிறது.
சில நேரம், அந்த தகவலும் வருவதில்லை. அதிர்ச்சியடையும் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட வங்கிகளில் சென்று முறையிட்டால், "வங்கி ஊழியர்கள், மிஷின் பழுது, அதனால், தவறான தகவல் வந்துள்ளது. உங்கள் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்படவில்லை' என சமாளிக்கின்றனர்.
திருப்தியடையாத வாடிக்கையாளர்கள், மற்ற ஏ.டி.எம்., மையங்களுக்கு ஓடிச் சென்று தங்கள் வங்கி கணக்கை சரிபார்த்து நிம்மதியடைகின்றனர். பழுதடைந்த ஏ.டி.எம்., மைய மிஷின்களை சரி செய்ய வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.