துறையூர்: திருச்சி உறையூர் செல்ல வேண்டிய சிறுவன், துறையூர் பஸ் ஸ்டாண்ட்டில் பரிதவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் இரவு, 10.30 மணியளவில், துறையூர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில், சிறுவன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களிடம், "திருச்சி செல்ல வேண்டும். காசு கொடுங்கள்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை பார்த்த சிலர், துறையூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்தவர் சப்பாணி- செல்வி ஆகியோரின் மகன் விக்னேஷ், 9, என்பதும், தென்னூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 4ம் வகுப்பு படிப்பதும் தெரியவந்தது.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து, துறையூர் பஸ்சில் ஏற்றி விட்டு விட்டனர். துறையூரில் இருந்து மீண்டும் ஊருக்கு செல்ல முடியாததால், பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
தில்லைநகர் போலீஸாருக்கு, துறையூர் போலீஸார் தகவல் கொடுத்தனர். நேற்று காலை, துறையூர் போலீஸ் ஸ்டேஷன் வந்த செல்வியிடம், போலீஸார் விக்னேஷை ஒப்படைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.