புதுக்கோட்டை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்ட வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இன்று இந்தியாவுக்கு வருகிறார். பீகார் மாநிலம், புத்தகயா, ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு சென்று வழிபடுகிறார். அவரது வருகைக்கு ம.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதே போல், ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில், இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென வக்கீல்கள் முடிவு செய்தனர். அதன்படி, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர் நீதிமன்றங்களில், வக்கீல்கள் நேற்று முதல் புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கினர். இதனால், நீதிமன்ற பணிகள் முடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.