க.பரமத்தி: தென்னிலை அருகே, சுடுகாட்டு பிரச்னையில், அப்பகுதியில் ஒட்டபட்ட சுவரொட்டிகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தென்னிலை தெற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேஞ்சேரிவலசு பகுதியில், 50க்கும் மேற்ப ட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மந்தை புற ம்போக்கு நிலத்தை, சுண்டமே டு பகுதியை சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, செஞ்சேரிவலசில் அங்கன்வாடி மையம் கட்ட முடிவு செய்யப் பட்டது. பஞ்சாயத்து நிர்வாகம், மந்தை புறம்போக்கு இடத்தில், ஒரு பகுதியை தேர்வு செய்தனர். இதற்கு சுணடமேடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட், 16ம் தேதி அரவக்குறிச்சி தாசில்தார் மூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இரு தரப்பினரும் தீர்வு ஏற்படும் வரை மந்தை புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தக்கூடாது, என தாசில்தார் உத்தரவிட்டார். பஞ்சாயத்து நிர்வாகம், அங்காவடி மையம் கட்டுவதை வேறு இடத்தில் மாற்றி விட்டது.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி, சுண்டமேட்டில் இறந்தவர் உடலை, பிரச்னைக்குரிய இடத்தில் புதைக்க ஏற்பாடு செய்தனர். செஞ்சேரிவலசு மக்கள், தென்னிலை போலீஸில் இது பற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் விசாரணை நடத்தினர். இருப்பினும், சுண்டமேடு மக்கள், மந்தை புறம்போக்கு நிலத்தில் உடலை புதைத்தனர்.
மந்தை புறம்போக்கு நிலத் தை சுடுகாடாக பயன்படுத்த, செஞ்சேரிவலசு மக்கள் தொ டர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு, சமுதய கூடம் கட்ட, வரும், 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக, தென்னிலை பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பெரு ம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரவக்குறிச்சி தாசில்தார் மூர்த்தி கூறியதாவது:
மந்தை புறம்போக்கு நிலமாக இருந்தாலும், சுடுகாடு இருக்கும் இடத்தில் சமுதாய கூடம் கட்ட வருவாய்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.