Advertisement
ஐ.மு., கூட்டணியின் கொள்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும் வகையில் உள்ளது: அரசு துறை ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,08:26 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 08,2013,08:34 IST

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித ஆற்றல் ஆய்வு நிறுவனம் (ஐஏஎம்ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி லட்சகணக்கான மக்களை தினக்கூலிகளாக மாற்றிய பெருமையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சாரும்.

வளர்ச்சி பாதையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வேலையின்மை மற்றும் தகவல்கள் என்ற தலைப்பில் திட்டக்குழுவுடன் இணைந்து ஐஏஎம்ஆர் நடத்திய ஆய்வு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பங்கு குறித்து இந்த அறிக்கை விபரம் தெரிவிக்கிறது. அதில் உலகின் 4 வது பெரிய பொருளாதார அமைப்புடைய நாடு இந்தியாவாக இருந்த போதிலும், மொத்த வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சி ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதே இந்த அரசின் சாதனையாகும். 2005-10ம் ஆண்டுகளில் 15 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டு உற்பத்தி மற்றும் சேவை துறைகளுக்கு சென்றுள்ளனர். வேலைவாய்ப்பில் விவசாயத்துறையின் பங்கு 57 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் இதே காலகட்டத்தில் கட்டுமானதுறையில் 18 மில்லியன் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். இத்துறையின் உள்கட்டமைப்பிற்காக அரசின் முதலீடும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

2005-10 வரையிலான 5 ஆண்டுகளில் விவசாயத்துறை உற்பத்தி பெரிய சரிவை சந்தித்துள்ளது. கட்டுமான துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இவர்களில் 95 சதவீதம் பேர் (44 மில்லியன்) எவ்வித சமூக பாதுகாப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். தொழிலாளர்கள் விவசாயத்துறையில் இருந்து பிற துறைகளிலுக்கு சென்றதால் ஒரு சில துறையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு துறை கடுமையான பொருளாதார சரிவை சந்தித்தது. 2005-10ல் உற்பத்தி துறையில் 5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது. அதே சமயம் சேவை துறைகளில் 2000-2005ல் 18 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மோசமான வளர்ச்சியை பெற்ற நாடுகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. சிறிய மற்றும் குறு தொழில் துறையில் கூலித்தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐஏஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொள்கையில்லாத ஒப்பந்தங்களால் உற்பத்தி துறையில் 2010ல் 60 சதவீதம் வேலைவாய்ப்பும் , உற்பத்தி அல்லாத துறைகளில் 80 சதவீதமும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
09-பிப்-201300:55:05 IST Report Abuse
பொன்மலை ராஜா வேலை வாய்ப்பு குறையத்தான் செய்யும் ... விலைவாசி உயர்வு தாறுமாறாகத்தான் இருக்கும் ... ... ... ... ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள இடைவெளி குறையும் ... ஆம் ... பணக்காரன் ஏழை ஆவான் ... ஆனால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருசிலர் உலகப் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் ... ... ... ... குடும்பத்திற்கு மூவர் சம்பாதித்தாலும் வருமானப் பற்றாக்குறையே குடும்ப பட்ஜெட்களில் தெரியும் ... இந்தியா ஏழைகள் அதிகரிக்கும் பணக்கார நாடாக மாறும் ... இந்திய ஆட்சி, அதிகாரம் முசோலினியின் வழித் தோன்றல்களின் கையில் இருந்து மாறி உலக வல்லரசு நாடுகளில் உள்ள பெருங்கம்பெனிகளின் கைக்கு சென்றுவிடும் ... இந்தியா மீண்டும் சில மேற்கத்தியக் கம்பெனிகளின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டுவிடும் ... இதெல்லாம் எதிர்பார்க்கப்படுபவை தான் ... இந்நிலை வராமல் தடுத்திட உருப்படியான யோசனை ஏதாவது சொல்லுங்கள் ... நீங்கள் சொல்ல மாட்டீர்கள் ... ஆட்சியை முதலில் மாற்றுங்கள் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Ashokkumar - Bangalore,இந்தியா
08-பிப்-201308:57:33 IST Report Abuse
Ashokkumar அரசு துறையே இப்படி சொல்லிடிச்சா???
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.