Advertisement
"மாமதுரையை போற்றுவோம்' விழா: இன்று துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,08:47 IST

மதுரை: மதுரையின் பழம்பெருமையை விளக்கும் வகையில், "மாமதுரையை போற்றுவோம்' விழா இன்று (பிப்.,8) துவங்கி பிப்., 10 வரை நடக்கிறது. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதையொட்டி, நேற்று தீபம் ஏந்துதல் நிகழ்ச்சி நடந்தது. அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள சமணர் படுகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. இங்குள்ள கி.மு.,3ம் நூற்றாண்டு கல்வெட்டில், "மதிரை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, மதுரையை பற்றி குறிப்பிடும் மிகவும் பழமையான கல்வெட்டாகும். இந்த தீப ஓட்டத்தை, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் துவக்கி வைத்தார். அதேநேரம், சமணர் படுகைகள் உள்ள, கீழக்குயில்குடியில் ராமசாமி, தென்பரங்குன்றத்தில் முத்தையா, குன்னத்தூரில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருண்சுந்தர் தயாளன், யானைமலையில் தமிழிசை அறிஞர் மம்முது ஆகியோர் தீபஓட்டத்தை துவக்கி வைத்தனர். தீபத்தை ஏந்தி வந்தவர்கள், மதுரை யானைக்கல் அருகே வைகை ஆற்றில் உள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். இன்று காலை மீனாட்சி அம்மன் கோயில், செயின்ட் மேரீஸ் சர்ச், கோரிப்பாளையம் தர்கா ஆகிய இடங்களில் இருந்தும் தீபங்கள் கொண்டு வரப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் ஏற்றப்பட்டு, விழா துவங்குகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
surya - keelathopu sellur madurai  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201309:22:17 IST Report Abuse
surya வாழ்த்துக்கள்!வாழ்க மதுரை மக்கள்! வளர்க மதுரை புகழ்!
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.