சென்னை: சராசரி இந்திய அரசியல்வாதிகளின் இமேஜ் மாற வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அரசியல்வாதிகளே நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம் என பொதுமக்கள் நினைக்கின்றனர். நான் எப்போதும் எனது சக தோழர்களிடம் கூறுவது என்னவென்றால், சராசரி இந்திய அரசியல்வாதிகளின் இமேஜ் மாற வேண்டும். பொதுமக்களின் பார்வையில் நமது இமேஜ் நிச்சயமாக நன்றாக இல்லை" என்று தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலை முதல் அடி வரை தேர்தல் முறைகளை மாற்றினால் ஒழிய அரசியல் வாதிகளின் இன்றைய அசிங்க முகத்தை மாற்ற முடியாது
1. அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும். அல்லது இப்போதுள்ள பிரதமர் ஆட்சிமுறையே தொடர்ந்தாலும் தொடரலாம். ஆனால் அதிபரோ பிரதமரோ நேரடியாக தேர்தல் மூலம் மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க பட வேண்டும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த உயர் பதவியை வகிக்க கூடாது.
2. பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்க படுபவர் இரண்டு முறைக்கும் மேல் போட்டியிட கூடாது.
3. இதே போல் அனைத்து மாநில முதல்வர்களும், எம் எல் ஏ க்களும், மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க பட வேண்டும். இவர்களும் இரு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட கூடாது.
4. இதே முறை உள்ளாட்சிகளுக்கும் பொருந்த வேண்டும்.
5. பாராளுமன்ற தேர்தல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பிலும், மாநில தேர்தல்கள், மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள், அந்தந்த உயர்நீதி மன்ற நீதிபதிகளின் கண்காணிப்பிலும், சுதந்திரமான தேர்தல் கமிஷனால் நடத்த படவேண்டும்.
இவை எல்லாம் நடந்து விட்டால் அத்வானியின் ஆதங்கம் தீர்ந்து விடும் என்பதில் ஐயமில்லை.
இதற்காக நாம் அனைவரும் இணைந்தது குரல் கொடுக்க வேண்டும். இந்த குரலுக்கு இன்றைய அரசியல் வாதிகள் இறங்கி வந்து ஒப்பு கொள்ளும் அளவிற்கு நமது குரல் ஓங்கி ஒழிக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.