செஞ்சி: செஞ்சியில் இன்று 9ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் அனிதா, 14. இவர் கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் கட்டட மேஸ்திரியான இவரது அத்தை மகன் ஏழுமலை, 24 என்பவருக்கும் செஞ்சியில்இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. நேற்று இரவு 10 மணிக்கு மணமகள் அழைப்பும், விருந்தும் முடிந்த நிலையில். விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பிரேமா, செஞ்சி மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி மற்றும் போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். மைனர் பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது என தெரிவித்து விசாரணை நடத்தினர். இதில் அனிதாவின் வயது 14 என்பது உறுதியானதால் திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமகள் அனிதாவை தங்களுடன் அழைத்து சென்றனர். இதனால் மணமக்கள் வீட்டினர் உடனே மண்டபத்தை காலி செய்து கொண்டு புறப்பட்டனர். இது தெரியாமல் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.