புதுடில்லி : இந்தியாவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில், 50 சதவீதத்தினர் இணையதள வசதி இல்லாமலேயே பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிவேக இணையதள வசதி,. வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. பொதுமக்களிடையேயும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு மிகுந்த அளவில் உள்ளது. இந்நிலையில், நீல்சன் மற்றும் இன்பார்மேட் மொபைல் இன்சைட் நிறுவனங்கள் இணைந்து, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கான ஆய்வினை சமீபத்தில் நடத்தியது. இதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களில் 50 சதவீதம் பேர், இணையதள வசதியை பெறாமலேயே, இவ்வகைப் போனை பயன்படுத்திவருவது தெரியவந்துள்ளது. இணையதள வசதியுடன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பாதி பேர், 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.