மும்பை : மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மும்பையின் புறநகர்பகுதியான சான்டாகுரூஸ் பகுதியில் உள்ள மிலன் சப்வே பகுதியில் குழந்தை அழும் குரல் கேட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தபோது, அங்கிருந்த குப்பைத்தொட்டியில் இருந்து அழுகை குரல் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. குப்பைத்தொட்டிக்கு அருகில் சென்று பார்க்கும்போது, பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை அங்கு அழுதுகொண்டிருப்பது தெரியவந்து, உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம், புறநகர் ரயிலில், ஆண் குழந்தைக கண்டெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.