சென்னை : இலங்கை தமிழர்களின் கலை, கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவைகளை, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கங்கணம் கட்டி அழித்து வெறியாட்டம் போட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய பயணத்தை எதிர்த்து, திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கறுப்புச்சட்டை போராட்டம், கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய கருணாநிதி கூறியதாவது, தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும், இலங்கை அரசு கங்கணம் கட்டி அழித்து வருகிறது. அங்கு தமிழ் பெயர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தமிழர்கள் மற்றும் அவர்களது அடையாளங்களை அழிப்பதில், ராஜபக்சே வெறியாயட்டம் நடத்தி வருவதாக அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல தெரியுமா? தெரியாதா? காங்கிரஸ் கட்சி கூட்டணிய விட்டு வருவிகளா இல்லையா? ராஜபக்ஷே வருகையை தடுத்து நிருதுவிகளா இல்லையா?தனது குடும்பத்திற்கு மட்டும் காரியத்தில் கண்ணா இருப்பார், தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் பேசியே மக்களை ஏமாற்றிவிடுவார். சிரமும் வரும்போதெல்லாம் இவருக்காகவே இலங்கை பிரச்சனையும் வந்து சேர்க்கிறது. இவ்வளவு நாள் இல்லாமல் மத்திய அரசை எதிர்ப்பதுபோல் பாவனை செய்கிறார். இது மக்களுக்கே வெளிச்சம்.உன்னுடைய சுயரூபம் அனைவருக்கும் தெரியும் ... இந்த பெருசை வம்பு செய்ய மத்திய அரசின் கைகாரிய்மா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.