FIR filed against union minister | மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவு| Dinamalar

மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவு

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முர்ஷிதாபாத் : மேற்குவங்க மாநிலத்தில் கோர்ட் வளாகம் முன்பு வன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மீது முர்ஷிதாபாத் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் மாவட்ட கோர்ட் முன்பு, மத்திய ரயில்வேதுறை இ‌ணையமைச்சர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த வாகனங்கள் கடும் சேதத்திற்குள்ளாகின. இதற்கு காரணமான மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில், போலீசார் முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கருத்தும் தற்போது எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை