DMK stage protest against SL president Rajapakse | தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
DMK stage protest against SL president Rajapakse தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி

சென்னை: தமிழ், தமிழர்களை அழிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே கங்கணம் கட்டி செயல்படுவதாக, சென்னையில் நடந்த கறுப்புச்சட்டை போராட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே, 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். பீகார் மாநிலம் புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அவர் சாமி தரிசனம் செய்கிறார். தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதாலும், ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருப்பதாலும் அவரது பயண விபரம் முறையாக வெளியிடப்படவில்லை. முன்னதாக, ராஜபக்சே டில்லிக்கு வந்து அங்கிருந்து புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் போராட்டங்கள் காரணமாக அந்த பிளான் மாற்றப்பட்டு, ஒடிசா மாநிலம் கட்டாக் சென்று, அங்கிருந்து புத்த கயா செல்கிறார் ராஜபக்சே. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து திருப்பதி வழியாக சாலை மார்க்கமாக திருமலை செல்கிறார். இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார்.

தி.மு.க., போராட்டம்: ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தி.மு.க., வினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இலங்கை தமிழர்களை பூண்டோடு அழிக்க விரதம் பூண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழி அடையாளம் தெரியாமல் சிதைக்கப்படுகிறது. ராஜபக்சே அரசு வெறியாட்டம் போட்டு வருகிறது. இலங்கை தமிழர் பகுதி கிராமங்களில் உள்ள தமிழ் பெயர்கள், சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று பேசினார். இதே போல், டில்லியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பயணம், தனிப்பட்ட முறையிலானது என்பதால் அவர் இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு மட்டுமே அவர் செல்வார் என்றும், தமிழ் அமைப்புகளின் போராட்டம் காரணமாக அதிபர் ராஜபக்சேவிற்கு இந்தியா பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, ராஜபக்சே டில்லி வந்து, விரைவில் அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த பிளான் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - toronto,கனடா
09-பிப்-201303:15:44 IST Report Abuse
bala இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லை .....இந்தாள் வேற எப்ப பாரு காமடி பண்ணிட்டு ...
Rate this:
Share this comment
Cancel
Selladurai Durai - perambalur,இந்தியா
08-பிப்-201316:21:29 IST Report Abuse
Selladurai Durai இலங்கை தமிழர் படுகொலை கி முதல் காரணமே கருணாநிதி தான் என்பது உலக நாடுகளே அறிந்த உண்மை. முன்பு முதல்வராக இருக்கும் பொது இலங்கை அரசுக்கு துணை போய் விட்டு விட்டு இப்போது போராட்டமா நடத்துகிறைய கருணா,....இதற்கு வருகின்ற நாடாளும்மன்ற தேர்தலின் தி மு க விற்கு தமிழக மக்கள். மாணவர் சமதாயம் தக்க பாடம் புகட்டுவர் கல்..........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-பிப்-201316:10:54 IST Report Abuse
Nallavan Nallavan நீங்கள் அந்த வேலையை ஏற்கனவே செய்து முடித்திட்ட காங்கிரசுக்கு அனுசரணையாக இருந்து கன கச்சிதமாக முடிக்க உதவி செய்தது ராஜபக்சேவுக்கு மறந்து போச்சு .... பாவம் .....
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
08-பிப்-201315:38:52 IST Report Abuse
Guru "தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே" தலிவரே உஷாரா இருங்க உங்க வேலையை எப்படி அவன் செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel
Kolappa - chennai  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201315:32:07 IST Report Abuse
Kolappa எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
08-பிப்-201315:31:56 IST Report Abuse
ksv ஆகாத பொண்டாட்டி பெற்றாலம் பத்து பிள்ளை
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
08-பிப்-201315:30:50 IST Report Abuse
ksv அப்ப உங்க கூட்டணியை விடு வெளிய வர வேண்டியதுதானே
Rate this:
Share this comment
Cancel
ragavi - chennai,இந்தியா
08-பிப்-201315:15:29 IST Report Abuse
ragavi ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக ஐநா சபை அறிவிக்க வேண்டும்...... தமிழினமே ஒன்று சேர்....இந்த போராட்டம் எல்லாம் ஆட்சியில் இருக்கும்போது செய்திருந்தால் இலங்கை தமிழர்கள் பிழைத்து இருப்பார்கள். இப்பொழுது இவர் செய்வதெல்லாம் வேஷம். இலங்கையில் இந்துக் கோவில்களை இடித்துவிட்டு இங்கு திருப்பதி தரிசனம்.?? பாவமன்னிப்பு கிடைக்கவே கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel
karthik - namakkal,இந்தியா
08-பிப்-201314:57:35 IST Report Abuse
karthik வேற வேல இருந்தா பாரு PO
Rate this:
Share this comment
Cancel
Jawahar - Erode,இந்தியா
08-பிப்-201314:53:50 IST Report Abuse
Jawahar கருப்பு சட்டை.. மஞ்சள் சட்டை.. பச்சை சட்டை... எந்த கலர் சட்டை போட்டாலும் அவன் வந்துட்டு போக தான் போறான். சும்மா நாடகம் போடாதீங்க .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை