Clash between DMDK MLAs in Tamilnadu Assembly | சட்டசபையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பு: மைக்கேல் ராயப்பனுக்கு விழுந்தது அடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பு: மைக்கேல் ராயப்பனுக்கு விழுந்தது அடி

Updated : பிப் 08, 2013 | Added : பிப் 08, 2013 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Clash between DMDK MLAs in Tamilnadu Assembly சட்டசபையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பு: மைக்கேல் ராயப்பனுக்கு விழுந்தது அடி

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய திட்டக்குடி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன் மற்றும் இதர எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே தமிழக சட்டசபையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனுக்கு அடி விழுந்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கவிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திட்டக்குடி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன், தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பான முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டதாகவும், அவற்றை முறையாக பரிசீலித்த முதல்வர், முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற உறுதியளித்ததாகவும், அதன்பின்னர் தனது தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், தன்னைப் போலவே, மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., களும் முதல்வரை சந்தித்து, தங்களது தொகுதி பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும் என்று தெரிவித்தார். தமிழழகனுக்கு ஆதரவாக ராதாபுரம் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனும் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தமிழழகனை தாக்க முற்பட்டனர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன், தமிழழகனை யாரும் தாக்காமல் தடுக்க முயன்றார். இதனால் அவரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ராயப்பன் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மைக்கேல் ராயப்பன் திருப்பித் தாக்கியதில், அனகை முருகேசன் என்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வுக்கு சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் நடந்த போது, முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthi assistant director - Chennai,இந்தியா
09-பிப்-201301:53:08 IST Report Abuse
Sakthi assistant director இப்படி நாலு போடு போட்டா தான் பாஸ்., அடங்கு வாங்க அந்த நாலு பேரும்., அவன் அவன் கோமனத்த உருவுனா தான் அம்மனம் தெரியும் ., ஓட்டு போட்ட மக்களுக்கு எதாவது செய்வியா., அத விட்டுபுட்டு அதிமுக கொள்கை பிரச்சாரம் பண்ரானுங்க அந்த நாலு தடி தாண்டவராயனுங்க.... இனிமே பேசுவானுங்க .?
Rate this:
Share this comment
Cancel
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201313:56:47 IST Report Abuse
அரசன் குடம் குடமா யாருக்கு நிறைய ரத்தம் வருதோ அவருக்குதான் அம்மா கட்சியில் இடம் உண்டு..முகத்தி்ல ரத்தம் கொப்பளிக்க அம்மாவை பரிதாபமாக பார்த்தால் அமைச்சர் பதவி உண்டு..எவ்வளவு அடி வாங்கினாலும் வெளியே வரும்போது சிரித்து கொண்டே வரனும்..அழ ப்டாது.அழுவது வீரனுக்கு அழகில்லை
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
08-பிப்-201313:53:20 IST Report Abuse
Samy Chinnathambi அஹா கிளம்பிட்டாங்கயா...கிளம்பிட்டாங்க..சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு....தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் ஆளுங்கட்சி சார்பில் வளர்ச்சி பணிகள் நடை பெறவில்லை....கட்சி மாறிய தேமுதிக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் கொஞ்சமும், ஸ்ரீரங்கம் தொகுதியில் கொஞ்சமும் நடை பெறுகின்றன. அவ்வளவுதான்...இதுக்கு போயி அந்த தமிழஷகன் வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம கூவி சண்டையை கிளப்பி விட்டாருய்யா? இவரு போனதோட இல்லாம இருக்கற எம்.எல்.ஏக்களையும் இழுத்தா பொத்திகிட்டு போக என்ன மானம் கெட்டவங்களா? தனியா வச்சு கவனிக்க போறாங்க ...
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
08-பிப்-201313:50:22 IST Report Abuse
Yoga Kannan அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் என்று நினைத்திருப்பார்களோ...
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
08-பிப்-201313:47:33 IST Report Abuse
Divaharan சட்டசபை எதற்கு வைத்திருகிறார்கள்? அம்மாவை புகழ்ந்து பாடத்தான். திறமை இல்லாதவர்களுக்கு ஏன் பொறமை?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
08-பிப்-201313:45:47 IST Report Abuse
K.Sugavanam அல்லக்கைகள் கேப்டனையே சாப்பிட்டு விடுவார்கள் போல இருக்கே..எல்லை மீறினால் கேப்டனும் அம்போன்னு ....வாங்கணும் போல இருக்கே...அதுவும் சட்ட மன்றத்திலேயே கட்டிப்புடி வைத்தியம் செய்யறாங்களே..இது தான் அடக்கி வாசிக்கிறதோ????
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
08-பிப்-201313:40:08 IST Report Abuse
nagainalluran அட்ரா சக்க அட்ரா சக்க
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
08-பிப்-201313:37:13 IST Report Abuse
v j antony இன்று இந்த MLA வை அடித்தவர்கள் நாளை அதிமுகவில் சேர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் எல்லாம் பணம் தான் எங்கு அதிகமாக கிடைக்கிறதோ அங்கு சென்றுவிடுவார்கள் இவர்களுக்கு தேவை பணம் தான் ...
Rate this:
Share this comment
Cancel
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201313:36:22 IST Report Abuse
அரசன் தர்ம அடி விழுந்தி்ருக்கும் போல..சட்டை கிழிந்த எம் எல் ஏ க்கு புதி்ய சட்டை வாங்கி தரும்படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்..வேறு யாருக்காவது டவுசர் கிழிந்ததா என்பதையும்,வாய் கிழிந்து ரத்தம் வருகிறதா என்பதையும் சரியான கேமரா வைத்து கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்..அடுத்த முறை சண்டை போடும் போது ஊமை குத்தா குத்தவும்..நன்றி..வாழ்துகள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-பிப்-201313:33:39 IST Report Abuse
Pugazh V மேலும் ரெண்டு இன்னோவா கார் அ தி மு க வில் ரெடி ஆகிவிட்டதோ? நீங்க நல்லா வருவீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை