சென்னை: தமிழகத்தில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டு, 50 சதவீதத்திற்கு மேலாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 1.75 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற 31 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில், தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்தின் கீழ் 100 நாட்களாக உள்ள வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். தமிழகத்தில் வறட்சி பாதித்து விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றாலும், தற்கொலை செய்து கொண்டவர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு நிலவரியும் ரத்து செய்யப்படும். மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும். ரூ. 181 கோடி செலவில் 15 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும். பொதுப்பணித்துறை மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனங்களுக்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் குடிநீர் தேவைக்காக ரூ. 37.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகளுக்கு இழப்பீடு, வறட்சி மாவட்டங்களாக அறிவித்தது உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியி்ல், வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு, முதல்வரின் இந்த அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சென்னை நீங்கலாக மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளதாக அவர் கூறினார்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.