ஆத்தூர் : குற்றவாளியை விடுவிக்க தூண்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுவித்த இன்ஸ்பெக்டரை கண்டித்து ஊனத்தூர் மக்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஊனத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் செந்தில், இவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்தது. இந்நிலையில், செந்தில், கண்ணனை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த கண்ணன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்திலை ஊர்மக்கள் பிடித்து, தலைவாசல் போலீசிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து செந்திலை சிறைவைத்தார். அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முருகேசன் மற்றும் ராஜமாணிக்கம் தூண்டுதலின்பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன், செந்திலை விடுவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வி.சி.கட்சி நிர்வாகிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். டிஎஸ்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.