சென்னை: டெல்டா மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களிலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டசபையில் பேசிய அவர், நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான குழு மற்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்றும், அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.