மும்பை: மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு பில் குறித்த விபரங்கள் குறுந்தகவல்களாக, அவர் சார்ந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் அனுப்புவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக, வாடிக்கையாளர்களுககு பில் தொகை அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவருக்கு, ஜனவரி மாத பில், ரூ. 13 கோடி அளவிற்கு வந்துள்ளது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மும்பை காண்டிவ்லி பகுதியை சேர்நதவர் விஸ்வநாத் ஷெட்டி. அவர் கூறியதாவது, நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்டிஎன்எல் நிறுவனத்தின் டால்பின் மொபைல்போன் சேவையை பயன்படுத்தி வருகிறேன். கடந்த ஜனவரி மாதத்திற்கு பில் தொகையாக. ரூ. 1318 வந்திருந்தது. பில் கட்டி விட்டு வீடு திரும்பியிருந்த போது, எனது மொபைலுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் தங்களது ஜனவரி மாத பில் தொகை ரூ. 13,18,47,813 என்றும், உடனடியாக பில் தொகையை கட்டவும், இல்லையேல் தொடர் துண்டிக்கப்படும். பில் பணம் கட்டிவிட்டீர்களானால், இதை புறக்கணித்து விடவும் என்று தகவல் வந்திருந்தது. இதனால் நான் மிகவும் அதிர்ந்துவிட்டேன். இதுகுறித்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இந்த குறுந்தகவல் தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்று விசாரிக்குமாறு தெரிவித்தனர். அங்கு விசாரித்ததில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறுதலாக அந்த குறுந்தகவல் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.