ஆமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடந்ததைப் போல், மீண்டும் ஒரு வன்முறை சம்பவம் குஜராத்தில் நடக்காது என தன்னைச் சந்தித்த ஐரோப்பிய யூனியன் தூதரிடம் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் முதல்வராக தொடர்ந்து 3வது முறையாக பொறுப்பேற்ற பின், கடந்த ஜனவரி 7ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் ஜோ கிராவின்ஹோ சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்திற்குப் பின், ஐரோப்பிய யூனியன் மோடியுடன் சுமூக உறவு வைத்துக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 10 ஆண்டுகளுக்குப்பிறகு, திடீரென நடந்த இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ கிராவின்ஹோ, கடந்த ஜனவரி 7ம் தேதி எங்களின் சந்திப்பு நடந்தது. அப்போது குஜராத் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குஜராத் கலவரம் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்க்கப்பட்டு வரும் விஷயம் என நான் மோடியிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். எனினும் ஜோ கிராவின்ஹோவிடம், குஜராத் கலவரம் போன்று மற்றுமொரு சம்பவம் நடைபெறாது என மோடி உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் தூதரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி, குஜராத் சம்பவத்தை யாரும் எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்று கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.