புதுடில்லி : சூரியநெல்லி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா துணை சபாநாயகர் குரியன் பதவி விலக வேண்டும் என்று கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குரியனை சந்திக்க சோனியா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் சூரியநெல்லியில், சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர், அரசியல்வாதி, அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். இவ்விவகாரம், கேரளா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் பரபரப்பிற்குள்ளாக்கியது. அந்நேரத்தில், அமைச்சரவையில் குரியன் பதவி வகித்தார். தற்போது குரியன் ராஜ்யசபா துணை சபாநாயகராக உள்ளார். நாட்டையே உலுக்கிய இவ்விவகாரத்தில் தொடர்புடைய குரியன், துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் தொடர அமளிகள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க குரியன் திட்டமிட்டிருந்தார். குரியனை சந்திக்க, சோனியா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.