பெய்ரூட் : சிரியாவின் ராணுவ தொழிற்சாலை மீது மர்மநபர்கள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 54 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா நாட்டின் அல் புராக் பகுதியில், ராணுவ தொழி்ற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்ததில் 54 பேர் பலியாயினர். இவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர். இத்தாக்குதல் குறித்து மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.