மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, உரிமம் மீறல் தொடர்பாக, மத்திய தொலைதொடர்புத்துறை, ரூ. 650 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக, அத்துறை உயர் அதிகாரி கூறியுள்ளதாவது, 2000 முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தேசிய அளவிலான அழைப்புகள் மற்றும் சர்வதேச அழைப்புகளின் மூலம், பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு, ஏர்டெல் உரிமம் மீறியதன் விளைவாக பெரும்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஒரு சர்க்கிளுக்கு ரூ. 50 கோடி வீதம், ஏர்டெல் நிறுவனத்தின் 13 சர்க்கிள்களுக்கு என ரூ. 650 கோடி அபராதமாக விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு, மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.