புதுடில்லி : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டில்லி விஜயத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குஜராத் முதல்வர் மோடி, சமீபத்தில் டில்லி வந்திருந்தார். பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு, டிலலியின் முன்னணி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கல்லூரி வாசலில் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டுதல், போராட்டம், ஆர்ப்பாட்டம் பல்வேறு வகைகளில் போராட்டங்கள் செய்தனர். மோடி எதிர்ப்பாளர்கள் மீது டில்லி போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் 184 ( பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்)ன் படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.