மதுரை: மதுரையில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், "பொட்டு' சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரணடைந்த, ஏழு பேரும், "இக்கொலைக்கான பின்னணி தெரியாது; "அட்டாக்' பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியிடம் தான் கேட்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளனர். மதுரையில், கடந்த, ஜனவரி மாதம், 31ம் தேதி, "பொட்டு' சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், நத்தம் கோர்ட்டில் சரணடைந்த, கீரைத்துறை சபாரத்தினம் உட்பட, ஏழு பேரிடம், மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களது மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், எந்த, "க்ளூ'வும் கிடைக்கவில்லை. அதேபோல், சுரேஷின் நண்பர்கள், தொழில் பங்குதாரர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததிலும், "க்ளூ' கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, ஏழு பேரிடமும் தனித்தனியே விசாரித்தது குறித்து போலீசார் கூறியதாவது: எங்களுக்கு எதுவும் தெரியாது; "அட்டாக்' பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியிடம் தான் கேட்க வேண்டும். நாங்க பணம் வாங்கி செய்யலை. எல்லாம், "தலைநகரத்திற்காகத்தான்' (அட்டாக் பாண்டி) செஞ்சோம்' என, தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, விஜயபாண்டி, கூட்டாளி கோபி உட்பட, மூவரையும் தேடி வருகிறோம். அவர்கள் பிடிபட்டால் தான், இக்கொலைக்கான உண்மையான காரணமும், பின்னணியில் யார் உள்ளனர் என்பதும் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.