| தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு

Updated : ஆக 20, 2010 | Added : ஆக 18, 2010 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக மூன்றாம் கட்ட ஆய்வை, கேரள அரசு இன்று துவங்கவுள்ளது. மேலும், அணையில் பராமரிப்புப் பணியையும் மேற்கொள்ள விடாமல், பிரச்னை கிளப்பி வருகிறது. தொடர்ந்து வம்பு பிடிக்கும் வகையில் கேரள அரசின் செயல்பாடு அமைந்துள்ளதால், தமிழகத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அணை அருகே புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்ற முடிவு எடுத்து, படிப்படியான நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக, புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அப்பகுதியில் சர்வே பணியை செய்து முடித்தது. அடுத்தகட்டமாக, அணை கட்டும் பகுதியில் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு நடத்துவதற்காக, ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து பாறை துகள்களை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பியது. தொடர்ந்து அப்பகுதியில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட ஆய்வை, கேரள அரசு இன்று துவக்குகிறது.


இதனடிப்படையில் மேலும் பத்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, பாறைகளின் துகள்களை சேகரிக்க உள்ளது. இதற்காக இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரங்களை கடந்த இரண்டு தினங்களாக மினி லாரிகள் மூலம் கொண்டு வந்து ஆய்வு செய்யும் பகுதியில் பொருத்தியுள்ளது. "ஆய்வுப்பணிகள் தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கும். இதில் சேகரிக்கும் பாறைத் துகள்களை ஆய்வுக்கு அனுப்பி புதிய அணை கட்டுவதற்கான சாத்தியம் குறித்து அறிக்கை வழங்கப்படும்' என, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கேரளாவின் இந்த தொடர்ச்சியான நடவடிக்கையால், பெரியாறு நீர்ப்பாசன வசதி பெறும் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். கேரள அரசின் செயலை எதிர்த்து, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், புதிய அணை உருவாகி, தமிழகத்துக்கு கிடைக்கும் சொற்ப தண்ணீரும் நின்று விடும் நிலை ஏற்பட்டு விடும். பராமரிப்பு பணியிலும் சிக்கல்: பெரியாறு அணையில் கடந்த சில தினங்களாக தமிழக பொதுப்பணித் துறையினர் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். அணைப்பகுதி, ஷட்டர், காலரி, ஆய்வாளர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வர்ணம் பூசும் பணி முடிந்துள்ளது. இந்நிலையில், மெயின் அணையை ஒட்டியுள்ள நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து ஆய்வாளர் மாளிகை செல்லும் படிக்கட்டுகளிலும், அணைக்கு அருகில் உள்ள ஷட்டரில் நீர் வெளியேறும் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும், இரும்பு, "கேட்' அமைப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தனர்.


இந்த இரும்பு கேட்டை அப்பகுதியில் பொருத்துவதற்கு சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார், தடுத்து நிறுத்தினர். அணைப் பகுதியில் இருக்கும் தமிழக பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் எடுத்துக் கூறியும், கேரள போலீசார் அனுமதிக்கவில்லை. இதன்மூலம், பெரியாறு பகுதியில் அடுத்த கட்ட பிரச்னையை கேரள போலீசார் துவக்கியுள்ளனர். இது தொடர்பாக, தமிழக பொதுப்பணித் துறையினர், தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து தமிழக அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக தன்னிச்சையான முடிவு எடுத்து, சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாட்டையும் மீறி கேரள அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வரும் நிலையில், அணைப்பகுதியில் நடக்கும் எதையும் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.RAMESH - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201012:14:58 IST Report Abuse
A.RAMESH தமிழன் ரொம்ப நல்லவன் அதனாலதான் ஏவ்வளவு அடித்தாலும் வாங்கிகொள்வான் '
Rate this:
Share this comment
Cancel
ஜெயக்குமார் - மதுரை,இந்தியா
19-ஆக-201020:57:39 IST Report Abuse
ஜெயக்குமார் கைப்புள்ள. கலக்கிட்டீங்க. சபாஷ்
Rate this:
Share this comment
Cancel
மோகன்ராம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
19-ஆக-201019:49:07 IST Report Abuse
மோகன்ராம் அது தான் இந்த பிரச்சனையை பற்றி பேசும் வைகோ வை கோமாளி என்று தான் வாசகர்கள் சித்தரிக்கிறார்கள் பின் யார் இதை பற்றி பேசுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X