"Copy cats in Black coats" : Erring Judges suspended in AndhraPradesh | தேர்வில் காப்பியடித்த நீதிபதிகள் சஸ்பெண்ட்| Dinamalar

தேர்வில் காப்பியடித்த நீதிபதிகள் சஸ்பெண்ட்

Updated : ஆக 28, 2010 | Added : ஆக 26, 2010 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஐதராபாத் : முதுகலை சட்டப்படிப்பு முதலாமாண்டு தேர்வில் காப்பியடித்த ஐந்து நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு வக்கீல்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை தேர்வு எழுத கல்வித்துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. அதே சமயம் நீதித்துறைக்கே களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ஆந்திர ஐகோர்ட், ஐந்து நீதிபதிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.


இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: முதுகலை சட்டப்படிப்பின் முதலாமாண்டு (எல்.எல்.எம்.,) தேர்வுகள், ஆந்திரா, வாரங்கலில் உள்ள காகதியா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், அடிலாபாத் சார்பு நீதிபதி கிஷ்டப்பா, ரங்காரெட்டி மற்றும் நிஜாமாபாத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் அஜித் சிம்மாராவ் மற்றும் விஜந்தர் ரெட்டி , சீனிவாசாச்சாரி, அனுமந்தாராவ் மற்றும் ஏழு வக்கீல்கள், சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் வரலாறு என்ற பாடத்திற்கான தேர்வை எழுதினர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் காப்பியடித்து எழுதுவதாக கூடுதல் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. தேர்வு மையத்துக்கு சென்ற அலுவலர்கள், அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மூன்று நீதிபதிகள் உட்பட ஏழு வக்கீல்கள் சட்டப்புத்தகங்களைப் பார்த்து காப்பியடித்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கல்வித்துறை அலுவலர்கள் கையும் களவுமாக பிடித்து, தேர்வு அறையிலிருந்து வெளியேற்றினர். இது குறித்து மனோகரன் கூறுகையில், "தேர்வில் காப்பியடித்த நீதிபதிகளின் வினாத்தாள்கள் திருத்தப்படமாட்டாது' என்றார். அதே சமயம் இத்தகவல் ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதி முகமது கக்ரூவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, காப்பியடித்த ஐந்து நீதிபதிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - puducherry,இந்தியா
27-ஆக-201018:29:43 IST Report Abuse
anand pavam avanga yenna pannuvanga avangala solli onnum aaga porathu intha payalugala 10th pass panna vechane antha antha vaathi, avana sollanum.... naanga 10th la bit adicha next 3yr ku exam yelutha mudiyathu aana ivangaluku suspend mattum... athellam ivangaluku sarkarai pongal mathiri....
Rate this:
Share this comment
Cancel
லூசு பொண்ணு - kottampatti,இந்தியா
27-ஆக-201018:01:42 IST Report Abuse
லூசு பொண்ணு Its all in the game judges:):):)....
Rate this:
Share this comment
Cancel
ravi - perambalur,இந்தியா
27-ஆக-201016:55:34 IST Report Abuse
ravi இது நம்ம நித்தி மேட்டர் போல கால போக்கில் மறந்திடுவாங்க .
Rate this:
Share this comment
Cancel
Sathya - Salem,இந்தியா
27-ஆக-201016:51:25 IST Report Abuse
Sathya இந்த நீதியரசர்கள் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டிகள்? நாளைய தீர்ப்புகளின் தரத்தை இன்றே நாம் அறிந்து விட்டோம். இனி , நாளைய தீர்ப்புகள் எளிதில் தீர்த்தபடும். பேய்கள் நாடு ஆண்டால்...............
Rate this:
Share this comment
Cancel
முஜிப்முஜிப் - DUBAI,இந்தியா
27-ஆக-201016:25:24 IST Report Abuse
முஜிப்முஜிப் நீதிபதியா இருந்தா என்ன அவர்களும் மாணவர்கள் தானே இப்போ வீடுன்கப்பா
Rate this:
Share this comment
Cancel
ந.balakrishnan - karur,இந்தியா
27-ஆக-201015:51:51 IST Report Abuse
ந.balakrishnan நீதிபதியே காப்பி அடிச்சா நீதிய எங்க காப்பதரது இதுபோன்ற நீதிபதி பதிவியில் இருந்தா அவர் பண அதிபதி ஆகிவிடுவார் குற்றத்திற்கு குறைவே இருக்காது தயவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
gopalkrishnan - தாம்பரம்Sanatorium,இந்தியா
27-ஆக-201015:43:38 IST Report Abuse
gopalkrishnan சார், ஒரு நிமிடம் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் மனைவி, மக்களை நினைதுபருங்கள் .. ஒவ்வொரு நொடியும் தங்கள் அப்பாவின் பெயர் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தும் நிலை வந்துவிட்டது .. பெரியவர்கள் சமூகத்துக்கும் குடும்பத்திற்கும் ஒரு முன் உதரணமாக திகழவேண்டும் .. வேலி பயிரை மேய்ந்த கதை ஆகிவிட்டது ..
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Chennai,இந்தியா
27-ஆக-201014:46:08 IST Report Abuse
INDIAN இது மாதிரி தான் இவங்க தீர்ப்பும் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
esspee - trichi,இந்தியா
27-ஆக-201013:48:55 IST Report Abuse
esspee சாமான்ய மக்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு ஒரே தீர்வு நீதித்துறை மட்டும்தான். அதிலேயே இதுமாதிரி குற்றவாளிகள் நீதிபதிகளாக வந்துவிட்டால் ?
Rate this:
Share this comment
Cancel
சோமன் - தோஹா,கத்தார்
27-ஆக-201012:32:23 IST Report Abuse
சோமன் முதல் கோணல், முற்றும் கோணல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை