Advertisement
சேமிப்பின் முக்கியத்துவம்: விழிப்புணர்வு பயிற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்ட நிதி நிர்வாகம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நிதி நிர்வாகம் குறித்து சிறப்பாக கற்பிக்க உதவும் வகையில், இந்த மூன்று நாள் பயிற்சி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

முதல் கட்ட பயிற்சி, கோவை பிரசன்டேஷன் பள்ளியில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இரண்டாவது கட்டமாக, கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில் நேற்று துவங்கிய இப்பயிற்சியை, உடுமலை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும், பயிற்சி ஒருங்கிணைப் பாளருமான இளங்கோ துவக்கி வைத்தார்.

கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 13 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 26 வணிகவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். வங்கியில் இருந்து பணம் பெறுவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பாதுகாப்பான வேறு முறைகளில் முதலீடு செய்வது என்பது குறித்தும், சேமிப்பின் அவசியம் குறித்தும் பயிற்சி அளிக்கப் பட்டது.

இது குறித்து இளங்கோ கூறுகையில், ""பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிப்பது, முதலீடு செய்வது பற்றி இப்போதிருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு வணிகவியல், பொருளியல் பாட வேளைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

சென்னை பங்குச் சந்தை ஆலோசகர் ஹரி பிரசாத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பேபி ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.