விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

Added : செப் 07, 2010 | கருத்துகள் (10)
Advertisement
விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி

சென்னை: ""விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்; பயம் ஏற்படக் கூடாது,'' என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமாமுசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன.


தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசியதாவது: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ரம்ஜான் விழா ஒரே நாளில் வருவதாக பாத்திமா குறிப்பிட்டு பேசினார். எந்த மத விழாவும், நிகழ்ச்சியும் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பயம் ஏற்படக் கூடாது.  இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒன்றாக கொண்டாட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு தேடும் அவல நிலை ஏற்படக் கூடாது. அடிப்படையில் எல்லா மதமும்,  "ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது' என்பதைத் தான் போதிக்கின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டில் ஆண்கள் மட்டும் படிக்க வேண்டும் என கருதக்கூடாது. முஸ்லிம் பெண்களும் கல்வி பயில வேண்டும். ஆண்கள் படித்தால் ஒரு குடும்பம் தான் முன்னேறும். பெண்கள் படித்தால் ஒரு சமுதாயமே முன்னேறும். எதிர்கால தலைமுறை முன்னேறும். பெண்களுக்கான 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து போகின்றன. இந்த கோரிக்கை  நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு கனிமொழி பேசினார்.


தமிழ்நாடு கேபிள் "டிவி' உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல்இளவரசு, மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு கமுதிபஷீர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலர் காதர்மொய்தீன்,  தேசிய சிறுசேமிப்பு துணைத்தலைவர் ரகுமான்கான், சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகுமார் - சென்னை,இந்தியா
08-செப்-201020:34:32 IST Report Abuse
நந்தகுமார் என்ன கொடுமை இதெல்லாம் ? தமிழனோட நிலைமை இப்படியா போகணும்? இவ எல்லம் புத்தி சொல்ற அளவுக்கு வந்துடுச்சே கடவுளே !
Rate this:
Share this comment
Cancel
சாமுவேல் - uk,இந்தியா
08-செப்-201017:14:57 IST Report Abuse
சாமுவேல் முஸ்லிம் மதத்தை கனிமொழி அவமதித்து விட்டார். தலையில் முக்காடு இல்லை என்பதால் முஸ்லிம் மக்கள் அனைவரும் திரண்டு எழுந்து கனி மொழி க்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
asdasf - madurai,இந்தியா
08-செப்-201016:31:10 IST Report Abuse
asdasf கனிமொழியால் கருணாநிதிக்கு மகிழ்ச்சி. கருணாநிதி கலந்து கொண்டால் கனிமொழிக்கு மகிழ்ச்சி. இவர்கள் குடும்பம் விழாக்களில் கலந்து கொண்டால் யாருக்கு மகிழ்ச்சி என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
08-செப்-201013:15:58 IST Report Abuse
ஜி.பன்னாடை பாண்டியன் நல்லா நெத்தியில அடிக்கிராப்ல முஸ்லிம் சமுதாயத்துக்கு சொன்னீங்க. கொடுக்கற 3.5 % ஒதுக்கீட்டை ஆண்களே ஆட்டையை போட கூடாதுன்னு. இப்ப புரியுதா ?
Rate this:
Share this comment
Cancel
பாலாஜி - ஜுபைல்,சவுதி அரேபியா
08-செப்-201011:30:46 IST Report Abuse
பாலாஜி நீ பேரு குழந்தை, கருணாதிக்கு மகளா பிறந்தா என்ன வேணா பேசலாம்.
Rate this:
Share this comment
Cancel
விஜய் - சென்னை,இந்தியா
08-செப்-201010:42:37 IST Report Abuse
விஜய் கனிமொழிநிதி கூட நோன்பு திறக்க கிளம்பியாச்சா. உங்கள் குடும்பம் ஒழிந்தால் தினமும் தமிழ்நாட்டில் விழாகோலம் தான்.
Rate this:
Share this comment
Cancel
vijay - சென்னை,இந்தியா
08-செப்-201007:16:27 IST Report Abuse
vijay அய்யோ... இந்த அம்மா வேறயா? மகளிர் அணி சார்பிலா? ரம்ஜான் வந்துட்டா உங்கள போல உள்ள அரசியல் வியாதிகளுக்கு வேற வேலையே இல்லையா.........இன்னும் எத்தன பேரு டா , கேலம்பிர்கிங்க???
Rate this:
Share this comment
Cancel
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
08-செப்-201006:40:23 IST Report Abuse
பாலா ஸ்ரீனிவாசன் திருவிழாக்களால் பயம் ஏற்படக்கூடாது என்பது உண்மைதான். இந்த வருடம் நகரில் 150 இடங்களில் இந்து முன்னணியினர் பிள்ளையார் வெச்சு விழா நடத்துறாங்க; சிறுபான்மையினர் ஒட்டு கிடைக்குமா கிடைக்காதா என்கிற பயம் இல்லாமல் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
srini - chennai,இந்தியா
08-செப்-201006:15:54 IST Report Abuse
srini சரி உங்கப்பா பகுத்தறிவு பகலவன், ஒங்களுக்கு அதல்லாம் சொல்லி தரலையா? இந்த சாமி கும்புடறது, நோன்பு இருக்கறது இதெல்லாம் ஈரோட்ல பாடம் பயின்ற திராவிட சுயமரியாதை பூனைக்கு தெரியாதா ??
Rate this:
Share this comment
Cancel
சோமன் - தோஹா,கத்தார்
08-செப்-201002:51:50 IST Report Abuse
சோமன் பெண்கள் படிச்சா சமுதாயமே முன்னேறும்னு சொந்தமா யோசிச்சு சொன்னீங்க பாருங்க உலக கவிக்குயிலே, அது நூத்துக்கு நூறு சரி. ஆனா இந்து,கிறிஸ்தவ, இசுலாமிய மக்கள் இடையில பெரிய வேற்றுமை எல்லாம் இருக்குற மாதிரி தெரியல. ஆனா உங்கள மாதிரி அரசியல் வாதிங்க (???) பண்ற கலாட்டாவுல தான் கொழப்பமே வருது. நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறீங்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை