பாதியில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம்:தாகத்தில் கான்சாபுரம் மக்கள் தவிப்பு| Dinamalar

பாதியில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம்:தாகத்தில் கான்சாபுரம் மக்கள் தவிப்பு

Added : செப் 08, 2010 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாதியில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம்:தாகத்தில் கான்சாபுரம் மக்கள் தவிப்பு

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் குடிநீர் திட்டப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால் மக்கள் நா வறட்சியில் சிக்கியுள்ளனர்.கான்சாபுரம் குடிநீர் பிரச்னையை தீர்க்க வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து கடந்தாண்டு 10 லட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. அத்திகோயில் பளியர்மேடு பகுதியில் உறைக்கிணறு அமைத்து அங்கிருந்து 6 கி.மீ. தூரத்திற்கு பைப்லைன் பதிக்கும் பணிகள் நடந்தன. தரமற்ற பி.வி.சி. பைப்புகள் பதிக்கப் பட்டதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

கோடை நெருங்கியதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதன் பேரில் நான்கு மாதத்திற்கு பின் மீண்டும் பணி துவக்கப்பட்டது. 3 கி.மீ. தூரத்திற்கு பதிக்கப்பட்ட தரமற்ற பைப்புகள் தோண்டி எடுக்கப்பட்டு தரமான பைப்புகள் பதிக்கப்பட்டன. இதற்கே மொத்த மதிப்பீடு தொகை செலவழிந்துவிட்டதால் திட்டப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் கிணற்று நீரேயே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 கி.மீ., தூரத்திற்கும் பைப்புகள் அமைத்து பணி முடிக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லதம்பி - sriviliputtur,இந்தியா
08-செப்-201015:32:52 IST Report Abuse
நல்லதம்பி நொவ் i am working in அபு தாபி ,but it will help me to know about my native ,thank you verymuch.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X