கடலில் கலக்கும் இடம்: கலெக்டர் ஆய்வு| Dinamalar

தமிழ்நாடு

கடலில் கலக்கும் இடம்: கலெக்டர் ஆய்வு

Added : மே 29, 2010

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அம்புலியாறு அம்மன்சத்திரம் என்ற இடத்தில் கடலில் கலக்கும் இடத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் கலெக்டர் சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அம்புலியாறு வழியாக கடல் நீர் நிலபகுதிக்கு வருவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுமா? என்பது குறித்தும், கடல் நீர் அம்புலியாறு வழியாக உள்வாங்கும் என்பது குறித்த முழு விவரங்களை சேகரித்து அறிக்கை சமர்பிக்குமாறு பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கேசவன், அந்தோணிதுறை, பேராவூரணி தாசில்தார் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X