Passed out students hefty donation to the Chennai varsity | சென்னை பல்கலை.,க்கு முன்னாள் மாணவர் ரூ.18 கோடி நன்கொடை| Dinamalar

சென்னை பல்கலை.,க்கு முன்னாள் மாணவர் ரூ.18 கோடி நன்கொடை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : ""சென்னை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராஜசேகர் ஷாம், பல்கலைக்கு நன்கொடையாக வழங்கிய 18 கோடியே 60 லட்சம் ரூபாயில் மாணவர் விடுதி மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும்,'' என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.


சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை பல்கலை முன்னாள் மாணவர் ராஜசேகர் ஷாம், கதிரியக்கவியல் படித்து மனைவி லூசிலாவுடன் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். அவர் எழுதிய உயிலில், தனது சொத்தில் பாதியை சென்னை பல்கலைக்கும், மற்றொரு பாதியை அமெரிக்க அமைப்பிற்கும் நன்கொடையாக வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார். ராஜசேகர் ஷாம், லூசிலா இருவரும் கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் மரணமடைந்தனர். சென்னை பல்கலைக்கு வர வேண்டிய தொகையில், 50 சதவீதத்தை வரியாக பிடித்துக் கொண்டு மீதி தொகையை தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. சென்னை பல்கலை, லாப நோக்கமின்றி செயல்படும் பல்கலையென எடுத்துக்கூறிய பின், முழுத்தொகையும் வழங்கப்பட்டது. இதன்படி, 18 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 747 ரூபாய் சென்னை பல்கலைக்கு கிடைத்துள்ளது.


இத்தொகையில், தரமணி சேக்கிழார் வளாகத்தில் வெளிநாட்டு, ஆராய்ச்சி, முதுநிலை மாணவர்களுக்கு 14 கோடி ரூபாயில் விடுதிகள் கட்டப்படும். இதன் மூலம் 1,400 மாணவர்கள் பயனடைவர். மேலும் நான்கு கோடி ரூபாயில், சேத்துப்பட்டில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும். விடுதி வளாகம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்திற்கு ராஜசேகர் ஷாம் பெயர் வைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் முடிக்கப்படும். ராஜசேகர் ஷாமை போல, சென்னை பல்கலை முன்னாள் மாணவர்கள், பல்கலையின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.


பிரான்சின் மான்ட்பெலியர் பல்கலையின் ஐரோப்பா - ஆசியா இடமாற்ற கூட்டமைப்பில் சென்னை பல்கலையும் இடம் பெற்றுள்ளது. இதற்காக சென்னை பல்கலை அனுப்பிய மகவா (ஆசியாவில் மனித சுகாதாரம், சுற்றுச்சூழல், உயிரி பன்முகத்தன்மை) திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 19 பல்கலைகளில், சென்னை பல்கலை மட்டுமே ஒரே இந்திய பல்கலையாகும். இதன் மூலம் 19 பல்கலைகள் இடையே ஆசிரியர், மாணவர் பரிமாற்றம் நடைபெறும். மாணவர்கள் 6-48 மாதமும், ஆசிரியர்கள் 1-3 மாதமும் வெளிநாட்டு பல்கலையில் தங்கி படிக்க முடியும். மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுவதுடன், மாதம் 90 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.


மூன்று முதுநிலை மாணவர்கள், மூன்று ஆராய்ச்சி மாணவர்கள், இரண்டு முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் இந்த மாணவர் பரிமாற்றத்தின் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கு அனுப்பப்படுவர். இதற்கான மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். வர்த்தக கல்வி, மேலாண்மை அறிவியல், ஜியாகிரபி, ஜியாலஜி, மருத்துவ அறிவியல், இயற்கை அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் 2011ம் ஆண்டு ஜனவரியிலிருந்து துவங்கும். இவ்வாறு திருவாசகம் கூறினார்.


Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (75)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - vellore,இந்தியா
19-செப்-201009:24:51 IST Report Abuse
murali Neengal nenaitha ennam neraiverum.
Rate this:
Share this comment
Cancel
prabusaran - qatar,இந்தியா
19-செப்-201004:19:53 IST Report Abuse
prabusaran MR.Rajashekar is world super star**********
Rate this:
Share this comment
Cancel
சாந்தி selvaraj - thanjavur,தென் கொரியா
18-செப்-201001:12:18 IST Report Abuse
சாந்தி selvaraj உங்களது ஆன்மா சாந்தியடைய வணங்குகிறேன்...
Rate this:
Share this comment
Cancel
rajavelu - போர்த்ச்மௌத்,யுனைடெட் கிங்டம்
18-செப்-201000:16:29 IST Report Abuse
rajavelu அய்யா, ராஜசேகர் அவர்களே, உங்கள் பாதம் தொட்டு தலை வணங்குகிறேன்.......உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு என்றென்றும் நன்றி...............
Rate this:
Share this comment
Cancel
இ.முஹம்மத் பாரூக் - kunjaram,இந்தியா
17-செப்-201022:48:01 IST Report Abuse
இ.முஹம்மத் பாரூக் இவரை போன்று இந்தியன் அனைவரும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.ராஜசேகருக்கு தெய்வம் அருள் செய்யட்டும்.வாழ்க அவர் புகழ்.
Rate this:
Share this comment
Cancel
R.SounderaRajan - kerala,இந்தியா
17-செப்-201020:36:26 IST Report Abuse
R.SounderaRajan Expect Dinamalar to furnish more about the Great personality Mr.Rajashekar shyam and his achievements in radiology. This should flash to every Indian in this country. His greatnes prosper the Universe and his genarosity springs for ever.!!!
Rate this:
Share this comment
Cancel
marane - paris,பிரான்ஸ்
17-செப்-201020:27:24 IST Report Abuse
marane ஐயா! உங்களுக்கு எங்களின் நன்றி !!! உங்களின் சிறு வயது கனவை, நினைவாக மாற்றிய ஐயா, நீங்கள் ஒரு பெரிய மேதை!!! நீங்கள் எங்களின் உள்ளதை பிடித்து விட்டார். உங்களுக்கு எங்களின் பிரார்தனை!!!!!
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
17-செப்-201020:18:44 IST Report Abuse
Ram Read this news, make me pressurise, really it was amazing. Only few peoples like this kind have generous heart. Mr. Abdul kalam told our india will become superpower in 2020. it's practically possible and true. People of this kind of great people will never leave our country in under develop, they will bring up as a superpower oneday. Like china, the whole people spirit is filled with making their own country No.1 in the world, if they can do, why don't we? China have more population than india. if they can achieve, why don't we achieve?.My only suggestion is to overcome our weakness. There are so many but my concern is to change our political system. Why don't we follow our neighbour china and its political policy? We just bullshit ourself as we are No.1 Democratic country in the world, but so many loop holes are there. Please i beg all the students & youngsters try to change political system, atleast some strong punishment particularly to politicians those who misuse power and proven to be a criminal(e.g., Ministers, M.P, MLA & Councellers and gazetted officers under Govt. secretary like IAS, IPS and even police, advocate personals) punishment atleast life time unbailable jail or even hanging. The more luxury and benefits these people enjoy than a common man, so punishment also to be equally more than a normal right? Even common wealth games, we all heard about some scandal right. Still we are sleeping. These are all International issue. Please think of it and do something for our mother india. - Your's well wisher
Rate this:
Share this comment
Cancel
v. jayaraman - Mayiladuthurai,இந்தியா
17-செப்-201020:13:13 IST Report Abuse
v. jayaraman An Indian Family lived in U.S.A. donated their wealth for our country's development. Whereas Indians (Politicians and Govt. officials) living within the country looting the Country right and left. We pray God to atleast to spent this money without any kick back by the authorities (Not possible, because all hands are already accustomed). Instead giving to this highly corrupted Govt. Authorities, the US Govt. can create some good proposals to our country and they can undertake the job in India. Only then this money will be spent properly. God, please save this money for the departed couples donated for the good cause. Then only their "Aathmaa" Santhi Adaiyum. Otherwise, their "Aathmma" will always surrouning by us.
Rate this:
Share this comment
Cancel
balaji - bangalore,இந்தியா
17-செப்-201019:50:48 IST Report Abuse
balaji இந்த பணம் நல்ல வழியில பயன்படுத்த வேணும் நூலகம் ,கம்ப்யூட்டர் ,பில்டிங் ....டெண்டர் ஒழுங்கா கொடுக்கணும் நன்றி டு ராஜசேகர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.