திட்டமிட்டபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய மனு நிராகரிப்பு| Dinamalar

திட்டமிட்டபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய மனு நிராகரிப்பு

Added : செப் 17, 2010 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
திட்டமிட்டபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய மனு நிராகரிப்பு

லக்னோ : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை தள்ளிவைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது. இப்பிரச்னை கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச், வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.


இத்தீர்ப்பு வரும் என்ற நிலையில், சில தினங்களுக்கு முன் ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர், அலகாபாத் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளதால், மத்திய அரசும், மாநில அரசும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதிலிருந்தே மத வன்முறை நிகழ்வது தவிர்க்க முடியாதது போல தோன்றுகிறது. இந்த நாட்டின் ஒரு பொறுப்பான குடிமகன் என்ற முறையில், மத ரீதியான பதட்டம் நிகழாமல் தடுக்க வேண்டியது எனது கடமை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விரைவில் துவங்க உள்ளன. அப்படிப்பட்ட சூழலில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகி மத ரீதியான பதட்டம் உருவாவது சரியானதல்ல. எனவே, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதை தள்ளிவைக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் கோர்ட்டுக்கு வெளியே சுமுகத் தீர்வு காணும் வகையில், இதைச் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கு சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் அகில பாரத இந்து மகாசபா சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், "அயோத்தி பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. இருந்தாலும், உருப்படியான தீர்வு எதுவும் காணப்படவில்லை. அதனால், தீர்ப்பு வழங்குவதை எந்த வகையிலும் தள்ளி வைக்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டது.


அதே நேரத்தில், அயோத்தி வழக்கில் பிரதான நபர்களில் ஒருவரான நிர்மோகி அக்ஹரா, நேற்று அலகாபாத் ஐகோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அயோத்தி பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான ஒரு தீர்வை காண நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிய வேண்டும். இந்தப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண 10 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தீர்ப்பு வழங்குவதை செப்டம்பர் 24ல் இருந்து சில நாட்கள் தள்ளிவைக்கலாம்,'' என, தெரிவித்தார். அதேபோல், மகந்த் ராஜா ராமச்சந்திரா என்பவர் சார்பாக அவரின் வக்கீல், ஆர்.எல்.வர்மா என்பவரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அயோத்தி பிரச்னையில் கோர்ட்டுக்கு வெளியே சுமுகத் தீர்வு காண 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும்,'' என கோரியிருந்தார்.


இந்நிலையில், ரமேஷ் சந்திர திரிபாதி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.யு.கான், டி.வி.சர்மா மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அயோத்தி பிரச்னை தொடர்பாக சமரச தீர்வு காண எந்தத் தரப்பினரும் ஆர்வமாக உள்ளனரா' என கேட்டனர். அதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, திரிபாதியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கருதிய நீதிபதிகள், அதை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு கடும் அபராதம் விதிக்கவும் தீர்மானித்தனர். ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கலாம் என, நீதிபதி அகர்வால் பரிந்துரை செய்தாலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறுகையில், "இந்த மனுவானது அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதை திசை திருப்பும் முயற்சியாகும். வழக்கு முடிவுக்கு வருவதை தடை போடும் செயலாகும். அயோத்தி வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகள் அனைவரும் திரிபாதியின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், திரிபாதியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதோடு, அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்றனர். கடந்த 60 ஆண்டுகளாக பேசப்படும் விஷயத்திற்கு முடிவு காணும் தீர்ப்பாகும் என்பதால் திட்டமிட்டபடி 24ம் தேதி தீர்ப்பு வருவதில் எல்லாரும் ஆர்வமாக உள்ளனர். ஆகவே திட்டமிட்டபடி தீர்ப்பு வரும் என்ற முடிவை சட்டவல்லுனர்கள் ஹரீஷ் சால்வே, கே.கே.வேணுகோபால், உட்பட பலரும் வரவேற்றிருக்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
XYZ - chennai,இந்தியா
18-செப்-201022:38:38 IST Report Abuse
XYZ These guys will copy US twin tower model judgemet/implementation. They can not think of their own.
Rate this:
Share this comment
Cancel
ராஜுராஜு - மதுரை,இந்தியா
18-செப்-201011:19:25 IST Report Abuse
ராஜுராஜு It is sade that the pettioner was fined. It seems that he had good intention - mainly Common wealth games. So why SC is so strict suddenly on the public interest pettition. So many people are using the courst for their personal interest but here there is no room that the pettitioner is benefiting from this pettition.
Rate this:
Share this comment
Cancel
balaji - singapore,சிங்கப்பூர்
18-செப்-201008:59:36 IST Report Abuse
balaji Atlast the case has came to the end. Sure all people started worrying, what could be the result and what is going to be happen after this result. So there should be some aware programs to be conduct which will show unity of our nation. The news will reach to people heart only by media/press. I hope all the cine actors/actress have to come out with some kind of ads,which should show our unity. Instead of saying "em mozhiyam semmozhi" we can "Em madhamum sammadhamey"-the land has no differences in communities, its our nation,its our land,its our land . like this ads should give a energy to people will not kepp them panic. The politicians may preach/ advise the people instaed of fighting for their chairs.
Rate this:
Share this comment
Cancel
ரகு - singapore,இந்தியா
18-செப்-201008:13:02 IST Report Abuse
ரகு இந்திய சட்டத்தில் இன்னும் நம்பிக்கை உள்ளது.. நியாயமான தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.. தீர்ப்பு எதுவஹினும் அதை மதித்து நடக்க எல்லோரும் மிடிவேடுப்போம்.. உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு வேலை கொடுப்போம்.. வாழ்க இந்தியா வளர்க மத ஒற்றுமை..
Rate this:
Share this comment
Cancel
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
18-செப்-201004:26:41 IST Report Abuse
சந்திரன் எந்த தரப்புக்காயினும் இந்த தீர்ப்பு ..இறுதித் தீர்ப்பு அல்ல...இன்னும் சுப்ரீம் கோர்ட் அப்பீல், வாய்தா போன்றவற்றிற்கு சட்டம் அனுமதிக்கும் என்பதை மனதில் நிறுத்தி...அமைதி காக்க வேண்டும் ...அப்படி கலவரம், வன்முறை செய்ய வேண்டுமெனில் தயவு செய்து... அரசியல்வாதிகள் இருக்குமிடங்களில் பொய் செய்யவும்...அப்பாவி பொது மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களையும் ஏற்படுத்தக்கூடாது....செய்வார்களா ?
Rate this:
Share this comment
Cancel
ரபியுதீன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201000:10:03 IST Report Abuse
ரபியுதீன் சபாஷ். தீர்ப்பும் நேர்மையாக வரட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை