Husband and Wife commits sucide | ஆத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தீக்குளிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தீக்குளிப்பு

Added : மே 29, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்:தலைவாசல் அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (26). அவரது மனைவி சத்யா (23)வுக்கும் இடையே இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த மனைவி சத்யா, வீட்டு சமையல் அறையில் இருந்த மண்ணெணய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அதையறிந்த கணவர் ரமேஷ், மனைவியை காப்பாற்ற முயன்றபோது இருவரும் தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த உறவினர்கள் ரமேஷ், சத்யாவை படுகாயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.படுகாயமடைந்த சத்யா, ரமேஷ் ஆகிய இருவரையும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யாவும், கணவர் ரமேஷ் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை