பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறல்

Added : செப் 29, 2010 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், மீண்டும் அத்துமறியுள்ளது, எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் துவங்கி 2 மணிநேரம் கடும் சண்டை நடைபெற்றதாகவும், மீண்டும் காலையில் இந்திய செக்போஸ்ட்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ந‌டத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவி்த்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பூஞ்ச் பகுதியில் உள்ள செக்போஸ்ட்களை குறிவைத்து, பாக். ராணுவம், ராக்கெட், கையெறி குண்டுகள், இலகுரக துப்பாக்கிகளின் துணைகொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தாங்கள் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MAS - ERODE,இந்தியா
29-செப்-201016:57:57 IST Report Abuse
MAS Pakistanis need a strong and memorable lesson.
Rate this:
Share this comment
Cancel
ஈழவேந்தன் - செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
29-செப்-201013:11:14 IST Report Abuse
ஈழவேந்தன் எதற்க்காக விழிப்புடன் இருக்கிறீர்கள் .அவர்கள் எப்படி தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பார்ப்பதற்கா .நமது அரசு மக்களின் வரிபணத்தை வாரி வாரி பாகிஸ்தானுக்கு நிவாரண உதவியாக கொடுத்தது .அந்த பணத்தை கொண்டு குண்டு வாங்கி நம் மீது வீசிகிறான் .காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்துகிறான் .நம்மை அவர்கள் அவமதித்த போதும் நம் அரசியல்வாதிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்கள் .நம்முடைய ராணுவம் பலம் உலகின் மூன்றாமிடம் என்று சொல்கிறார்கள் .ஆனால் இப்போது பார்க்கும் போது பலவீனமாக உள்ளது போல் தெரிகிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை